தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நட்சத்திரத்தில் கட்டம் போட்ட ராகு கேது.. மனநிறைவு பெறப்போகும் ராசிகள்

நட்சத்திரத்தில் கட்டம் போட்ட ராகு கேது.. மனநிறைவு பெறப்போகும் ராசிகள்

Jan 31, 2024 01:38 PM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 01:38 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது நட்சத்திர மாற்றத்தால் சுப பலன்களை பெற போகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்களுக்கென சொந்த ராசிகள் கிடையாது. எப்போதும் ராகு மற்றும் கேது பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். 

(2 / 7)

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்துள்ளனர். இவர்களில் இடமாற்றத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் சில ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 7)

கும்ப ராசி: தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பேச்சு திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். 

(5 / 7)

துலாம் ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடக்கும்.

(6 / 7)

ரிஷப ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு ராகு கேது சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்வில் இக்கட்டான சூழ்நிலைகளை கடந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் அதிக வளர்ச்சி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்