Perumal Rasis: காக்கும் கடவுள் பெருமாளுக்கு மிக மிகப் பிடித்த ராசிகள்.. இவர்களிடம் பெருமாளின் அம்சங்கள் நிறைய உண்டு!
- Perumal Rasis: பெருமாளுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்தும், பெருமாளுக்குப் பிடித்த ராசிக்காரர்களை சீண்டினால் எதிரிகள் வீழ்வதும் உறுதி என்கின்றனர், ஜோதிட நிபுணர்கள்.
- Perumal Rasis: பெருமாளுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்தும், பெருமாளுக்குப் பிடித்த ராசிக்காரர்களை சீண்டினால் எதிரிகள் வீழ்வதும் உறுதி என்கின்றனர், ஜோதிட நிபுணர்கள்.
(1 / 6)
Perumal Rasis: நாராயணன் வழிபாடு ஒருவரின் வாழ்வில் ஏற்றம் தரக்கூடியது. நாராயணனுக்கு பெருமாள், விஷ்ணு என்ற எண்ணற்ற பெயர்கள் உண்டு. நாராயணன் என்னும் சொல்லில், ‘நாரம்’என்ற சொல்லுக்கு, தீர்த்தம் என்று பொருள். ‘அயணன்’ என்றால், படுக்கை உடையவன் என்று அர்த்தம். பாற்கடலாகிய தீர்த்தத்தில் உறங்குபவன் என்று பொருள். ’நாராயணா நாராயணா’ என்னும் திருநாமத்தை உச்சரித்தால், நாரத முனிவர் போல் உலகம் முழுக்க செல்லும் வல்லமை கொண்டவர்களாக மாறுவர் எனக் கூறுகின்றனர், பண்டிதர்கள்.
(2 / 6)
ஒருவன் வாழ்வில் படும் துன்பங்களுக்கு பிறரை சுட்டிக்காட்டாமல், தான் செய்த செயல்களை நினைத்துப் பார்த்து நல்லபடியாக வாழ முயற்சிக்க வேண்டும். அது தான், கர்ம வினை. ஒருவரின் கர்ம வினையினால், படும் கஷ்டங்களில் இருந்து மீள இறை நம்பிக்கை என்பது இன்றியமையாததாகிறது. அப்படி நாம் செய்த கர்மவினைகளைத் தீர்க்க, பெருமாள் தரிசனம் இன்றியமையாதது. நம்மைக் காக்கும் கடவுளாக கருதப்படும் விஷ்ணுவே பெருமாள் என சாமானிய மக்களால் அழைக்கப்படுகிறார். அத்தகைய பெருமாளின் அருளாசியினை சிலர் பிறக்கும் ராசியினாலேயே எளிதாகப் பெற்றுவிடுகின்றனர். அப்படி பெருமாள் அருள் ஆசி பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(3 / 6)
கடக ராசி: இதிகாசங்களில் பழமையானது, ராமாயணம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ராமாயணத்தில் ராமர் கடக ராசியில் புனர் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கடகராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு பெருமாளின் அருளாசி நிச்சயம் கிட்டும். ராசிகளில் நான்காம் ராசியான கடகராசிக்கு சந்திரன் அதிபதியாவார். கடக ராசியினர் சுறுசுறுப்புடன் பணி செய்பவர்கள். கடக ராசியினர் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள். தலைமைப் பதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். சகிப்புத் தன்மையுடன் வாழ்வார்கள். இவர்களால் யாருக்கும் எந்த கெடுதலும் நடக்காது. உதவும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தான் கொண்ட வாதத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இத்தகைய பெருமாளின் அம்சம் கொண்ட கடக ராசியினர் பெருமாளை வணங்கினால் நன்மைகள் எக்கச்சக்கமாக கிட்டும். பெருமாளுக்குரிய ராசியினருக்கு கோபம் வந்தால் எதிரிகள் வீழ்வது உறுதி.
(4 / 6)
ரிஷப ராசி: மகாபாரதத்தில் பெருமாளின் அவதாரமான கிருஷ்ணர் ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே, ரிஷப ராசியினருக்குப் பெருமாளின் அருளாசி நிச்சயம் உண்டு. பொதுவாக ரிஷப ராசியினர் வசீகரிக்கும் தோற்றம்கொண்டவர்கள். பேச்சில் கெட்டிக்காரர்கள். எதனையும் திட்டமிட்டு திறமையுடன் முடிக்கக்கூடியவர்கள். இந்த ராசியினர், பிசினஸில் ஆர்வமுடன் இருப்பார்கள். இவர்களும் பெருமாளை வணங்க வணங்க உயர்ந்த இடத்தை எட்டுவர். பெருமாளுக்கு மிகவும் பிடித்த ரிஷப ராசியினரை சீண்டினால், எதிரிகளுக்கு நடப்பதே வேறு தான்.
(5 / 6)
கன்னி ராசி: பெருமாளின் அவதாரமான பரசுராமன் அவதாரத்தில், பரசுராமன் கன்னி ராசியில் பிறந்திருப்பார். எனவே, கன்னி ராசியில் பிறந்திருப்பவர்கள் பெருமாளின் அம்சம் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசியினர், யாரையும் புண்படுத்தமாட்டார்கள். தவறு செய்பவர்களைக்கூட அன்பால் திருத்திவிடுவார்கள். பன்முகத் துறையில் பணியாற்றிவிட்டு வெற்றிகாண்பார்கள்.இந்த மூன்று ராசிகளில் பெருமாள் அவதாரம் எடுத்திருப்பதால், இவை பெருமாளுக்கு உகந்த ராசிகள் என அழைக்கப்படுகின்றன. இவர்கள் பெருமாளை நினைத்து வணங்கினால் நினைத்தது கைகூடும் என்பது இந்து மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்