Leadership Female Signs: குறுகிய காலத்தில் தலைமைப்பதவிக்கு பொறுப்பான பெண் ராசிகள் இவர்கள்தானாம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Leadership Female Signs: குறுகிய காலத்தில் தலைமைப்பதவிக்கு பொறுப்பான பெண் ராசிகள் இவர்கள்தானாம்!

Leadership Female Signs: குறுகிய காலத்தில் தலைமைப்பதவிக்கு பொறுப்பான பெண் ராசிகள் இவர்கள்தானாம்!

Jul 16, 2024 07:53 PM IST Marimuthu M
Jul 16, 2024 07:53 PM , IST

  • Leadership Female Signs: குறுகிய காலத்தில் முன்னேறும் தலைமைத்துவமிக்க பெண் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Leadership Female Signs: ஜோதிட அறிவு முறையானது, நமது சூரிய மண்டலத்தில் உள்ள பல்வேறு கோள்களுடன் தொடர்புடையது. இங்கு வாரத்தின் நாட்களுடன் தொடர்புடைய ஏழு கிரகங்கள் உள்ளன. அவையாவன சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் சூரியன் ஆகும். ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான ஆற்றலைப் பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சூரியனில் இருந்து தொடங்குகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகங்கள் அந்தந்த நாட்களை அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களுடன் வைத்திருக்கின்றன. அவை சில முயற்சிகளுக்கு உதவுகின்றன. 

(1 / 8)

அப்படி ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது. அவர்கள் ஒருவருடன் பேசும்விதம், அணுகும் விதம், வாழ்வியல் நம்பிக்கைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.அதன்படி சில ராசிப் பெண்கள், குறுகிய காலத்துக்குள் தலைசிறந்த வெற்றியை வாகை சூடுவார்கள் என்பது உறுதி. அது அவர்களின் ராசியைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.அத்தகைய தலைமைத்துவ திறன்கள் கொண்ட ராசியைப் பற்றி அறிந்துகொள்வோம்.

(2 / 8)

அப்படி ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது. அவர்கள் ஒருவருடன் பேசும்விதம், அணுகும் விதம், வாழ்வியல் நம்பிக்கைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

அதன்படி சில ராசிப் பெண்கள், குறுகிய காலத்துக்குள் தலைசிறந்த வெற்றியை வாகை சூடுவார்கள் என்பது உறுதி. அது அவர்களின் ராசியைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அத்தகைய தலைமைத்துவ திறன்கள் கொண்ட ராசியைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மேஷம்: மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைத் திறம்பட நிர்வகிக்க முடியும். இதனால், பணியிடத்தில் இவர்களது விசுவாசம் போற்றப்படும். இந்த ராசிப் பெண்கள், குறுகிய காலத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். மேஷ ராசியினர் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். இந்தப் பெண்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையின் காரணமாக, தொடர்வெற்றியைப் பெறுவார்கள்.

(3 / 8)

மேஷம்: 

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைத் திறம்பட நிர்வகிக்க முடியும். இதனால், பணியிடத்தில் இவர்களது விசுவாசம் போற்றப்படும். இந்த ராசிப் பெண்கள், குறுகிய காலத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். மேஷ ராசியினர் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். இந்தப் பெண்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையின் காரணமாக, தொடர்வெற்றியைப் பெறுவார்கள்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்த பெண்கள், கடின உழைப்பாளிகள். இந்தப் பெண்களுக்கு வெற்றியைப் பெறவேண்டும் என்ற தாகம் இருக்கும். இவர்களது ராசியின் அதிபதியான சுக்கிரன் மரியாதை, கெளரவம் போன்றவற்றின் அடிப்படை கிரகமாகும். ரிஷப ராசிப் பெண்கள், எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பொறுப்பாக செய்வதால், தலைமைப்பொறுப்புக்கு குறுகிய காலத்தில் வந்துவிடுவார்கள்.

(4 / 8)

ரிஷபம்: 

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள், கடின உழைப்பாளிகள். இந்தப் பெண்களுக்கு வெற்றியைப் பெறவேண்டும் என்ற தாகம் இருக்கும். இவர்களது ராசியின் அதிபதியான சுக்கிரன் மரியாதை, கெளரவம் போன்றவற்றின் அடிப்படை கிரகமாகும். ரிஷப ராசிப் பெண்கள், எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பொறுப்பாக செய்வதால், தலைமைப்பொறுப்புக்கு குறுகிய காலத்தில் வந்துவிடுவார்கள்.

மிதுனம்: மிதுன ராசி பெண்கள், எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள். அதேபோல் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வைப்பதில் துடிப்புமிக்கவர்கள். கடின உழைப்பு, பகுத்தறியும் தன்மை,சமயோசிதத்தால் முன்னேற்றப்பாதைக்குச் செல்கிறார்கள்.

(5 / 8)

மிதுனம்: 

மிதுன ராசி பெண்கள், எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள். அதேபோல் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வைப்பதில் துடிப்புமிக்கவர்கள். கடின உழைப்பு, பகுத்தறியும் தன்மை,சமயோசிதத்தால் முன்னேற்றப்பாதைக்குச் செல்கிறார்கள்.

கடகம்:கடக ராசிப் பெண்கள், அமைதியான பண்பாளர்கள். ஒவ்வொரு பிரச்னையில் இருந்தும் மன வலிமையுடன் வெளியில் வருவார்கள். பிறரை வைத்து வேலை வாங்குவது, திறமையாகப் பணி செய்வது ஆகியவற்றில் கடக ராசிப் பெண்கள் பலருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். இதனால் குறுகிய காலத்தில் முன்னேற்றமான பாதைக்குச் செல்வார்கள்

(6 / 8)

கடகம்:

கடக ராசிப் பெண்கள், அமைதியான பண்பாளர்கள். ஒவ்வொரு பிரச்னையில் இருந்தும் மன வலிமையுடன் வெளியில் வருவார்கள். பிறரை வைத்து வேலை வாங்குவது, திறமையாகப் பணி செய்வது ஆகியவற்றில் கடக ராசிப் பெண்கள் பலருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். இதனால் குறுகிய காலத்தில் முன்னேற்றமான பாதைக்குச் செல்வார்கள்

கும்பம்: கும்ப ராசிப் பெண்கள், மிகக் கடினமான டாஸ்குகளையும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்கள். கும்ப ராசிப் பெண்கள் நேர்மையானவர்கள். உண்மையாக உழைத்து, பெரிய இடத்திற்கு வருவார்கள். கும்ப ராசிப்பெண்களுடன் நட்புகொள்பவர்களும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தைப் பெறுவார்கள்.கும்பராசியினர் எதையும் அலசி ஆராய்ந்து செய்வார்கள். 

(7 / 8)

கும்பம்: 

கும்ப ராசிப் பெண்கள், மிகக் கடினமான டாஸ்குகளையும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்கள். கும்ப ராசிப் பெண்கள் நேர்மையானவர்கள். உண்மையாக உழைத்து, பெரிய இடத்திற்கு வருவார்கள். கும்ப ராசிப்பெண்களுடன் நட்புகொள்பவர்களும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தைப் பெறுவார்கள்.கும்பராசியினர் எதையும் அலசி ஆராய்ந்து செய்வார்கள். 

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்