தாம்பத்திய வாழ்க்கையில் இடைவிடாத இன்பம் பெற.. இயற்கையாகவே பாலூணர்வை தூண்டும் அற்புத உணவுகள்
- ஆண், பெண் இடையிலான பாலியல் உறவு சிறக்கவும், இடைவிடாத இன்பம் பெறவும் இயற்கையாகவே பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் இருக்கின்றன. இவை பாலியல் உந்துதலை அதிகரிப்பதோடு, காதல் உணர்வையும் தூண்டும் என கூறப்படுகிறது.
- ஆண், பெண் இடையிலான பாலியல் உறவு சிறக்கவும், இடைவிடாத இன்பம் பெறவும் இயற்கையாகவே பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் இருக்கின்றன. இவை பாலியல் உந்துதலை அதிகரிப்பதோடு, காதல் உணர்வையும் தூண்டும் என கூறப்படுகிறது.
(1 / 9)
தாம்பத்திய வாழ்க்கையில் திகட்டாத இன்பத்தை பெறவும், பாலுணர்வை இயற்கையாகவு தூண்ட செய்யும் உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். இதன் மூலம் பாலியல் உந்துதல் அதிகரிப்பதோடு, பாலியல் வாழ்கையையும் மகிழ்ச்சிகரமாக வைத்து கொள்ளலாம்
(2 / 9)
இயற்கையான பாலுணர்வைத் தூண்டும் பழமாக வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடா இருக்கிறது. இந்த பழத்தில் பாலியல் ஆசை மற்றும் பாலியல் இன்பத்தை ஊக்குவிக்கும் பைட்டோநியூட்ரியண்ட்கள் அதிகம் உள்ளன. உங்கள் ஹார்மோன்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் உள்ளன. இதில் இருக்கும் ஃபோலேட் என்ற வைட்டமின் புணர்ச்சியை வெளிப்படுத்த உதவுகிறது.
(3 / 9)
சுவை குறைவாக இருந்தாலும் டார்க் சாக்லேட் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் உங்கள் மனநிலை மற்றும் பாலியல் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் இருக்கும் பினெதிலமைன் மற்றும் செரோடோனின் போன்ற ரசாயனங்கள் உங்கள் உடலில் பாலியல் உந்துதலை அதிகரிக்கிறது என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது
(4 / 9)
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் பாலியல் வாழ்க்கையையும் ஆரோக்கியமாக்குகிறது. ஆப்பிள்களை தினமும் உட்கொள்வது உங்கள் பாலியல் உந்துதலையும், பாலியல் மீதான ஆர்வத்தையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது. மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் காப்பகம் வெளியிட்ட ஆய்வில், ஆப்பிள்களை தொடர்ந்து உட்கொள்வது இளம் பெண்களில் சிறந்த பாலுணர்வை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது
(5 / 9)
குங்குமப்பூ அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்ற ஒரு மசாலாவாக அறியப்பட்டாலும், அதில் பாலுணர்வை ஏற்படுத்தும் பண்புகளும் உள்ளன என்பது பலருந்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உணவில் குங்குமப்பூவைச் சேர்ப்பது பாலியல் உந்துதலை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களுக்கான விறைப்புத்தன்மை குறைபாட்டில் நேர்மறையான விளைவுகளை கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
(6 / 9)
ரெட் ஒயின் தொடர்ந்து குடிப்பது பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ரெட் ஒயின் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் உற்சாகத்தை அதிகரிக்கிறது. அவர்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது
(7 / 9)
தேனில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அவை ஸ்டாமினாவை அதிகரிக்கின்றன. படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க உதவுகின்றன. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனில் இடம்பிடித்திருக்கும் போரான் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு பாலியல் தூண்டுதலை அதிகரிக்கிறது
(8 / 9)
வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் லிபிடோ-பூஸ்டிங் பண்புகள் உள்ளன. அவை உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற பாலியல் ஹார்மோன்களை உருவாக்க உதவுகின்றன. இவை பாலியல் தூண்டுதலை அதிகரிக்கவும், உச்சக்கட்டத்தை அடையவும் உதவுகின்றன. இதில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பைரிடாக்சின் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் கருவுறுதலையும் ஊக்குவிக்கின்றன
மற்ற கேலரிக்கள்