Therukural Arivu Marriage:இளையராஜா முன்னிலையில் நடந்த அறிவின் சுயமரியாதை திருமணம்! திருமாவளவன் வாழ்த்து! போட்டோக்கள் இதோ
- Therukural Arivu Marriage: திரை பாடலாசிரியர் மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவின் திருமணம் இசைஞானி முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சாதி மதம் இல்லாத சுய மரியாதை திருமானமாக இது நடந்தேறியுள்ளது.
- Therukural Arivu Marriage: திரை பாடலாசிரியர் மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவின் திருமணம் இசைஞானி முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சாதி மதம் இல்லாத சுய மரியாதை திருமானமாக இது நடந்தேறியுள்ளது.
(1 / 6)
தமிழ் திரை உலகின் புரட்சி மற்றும் உணர்ச்சி மிகு பாடல்களை தந்த பாடாலசிரியராக அறிவு இருந்து வருகிறார். இவரது பாடல்கள் அனைத்தும் சமூகத்தின் ஒடுக்கு முறை மீதான கேள்வியை எழுப்புகின்றன. பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தின் மூலமாகவே அறிவு பிரபலமாகத் தொடங்கினார். பின்னர் நீலம் குழுவின் casteless collection குழுவிலும் பாடகராக இருந்து வருகிறார்.
(Twitter)(2 / 6)
இளையராஜா மீது தீராத பற்று கொண்ட அறிவின் திருமணம் இளையராஜா முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அறிவு தனது காதலி கல்பனாவை சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இளையராஜா அறிவின் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தார். தனது ஆஸ்தான நபரை வரவேற்ற அறிவு இளையராஜாவை புகழ்ந்து ஒரு பாடலையும் பாடியிருந்தார். அந்த வீடியோ வைரலானது.
(3 / 6)
இவர்களது திருமணம் நடைபெற்ற பின் சென்னையில் இருக்கும் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்றனர். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த விசிக தலைவர் திருமாவளவன் எம். பி மணமக்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்தது வாழ்த்தினார். மேலும் அறிவு அம்பேத்கர் பாடலை பாடி மகிழ்ந்தார்.
(4 / 6)
விசிக வின் மற்ற பிரமுகர்களும் அறிவு-கல்பனா தமபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விசிக எம். எல். ஏ ஆளூர் ஷாநவாஸ் உடன் இருக்கும் புடைப்படமும் பகிறப்பட்டு வருகிறது.
(5 / 6)
அறிவு திருமணம் செய்துள்ள கல்பனா அம்பேத்கர் ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார். மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனர் அதியனுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் அறிவின் தொடாத பாடலின் வீடியோவையும் இவரே இயக்கியுள்ளார்.
(6 / 6)
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக வின் பாடலையும் எழுதி இசையமைத்து பாடியவர் அறிவு தான். அறிவின் பல பாடல்கள் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு விட்டது. இவர் இசையமைத்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் இன்று வரை பலரின் விருப்ப பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இவர்களது திருமணத்திற்கு பா.ரஞ்சித்தும் வந்துள்ளார். மேலும் பல திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்