Honey Amla : நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Honey Amla : நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. இதோ முழு விவரம்!

Honey Amla : நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. இதோ முழு விவரம்!

Feb 04, 2025 02:10 PM IST Divya Sekar
Feb 04, 2025 02:10 PM , IST

  • Honey Amla : நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் நன்மைகள் இன்னும் அதிகரிக்கும். சளி, இருமல், தோல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இது நிவாரணம் அளிக்கிறது. தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் மிகவும் நல்லது என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் நன்மைகள் இன்னும் அதிகரிக்கும். சளி, இருமல், தோல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இது நிவாரணம் அளிக்கிறது. தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம்.

(1 / 6)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேனில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கல் மற்றும் ஆன்டிமைக்கோபியல் பண்புகள் உள்ளன. தேனுடன் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடுவது பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

(2 / 6)

செரிமானம் மேம்பாடுக்கு உதவுகிறது : நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்களின் தாக்கம் குறையும். இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

(3 / 6)

தோல் வறட்சியை குறைக்கிறது : நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் அளவை அதிகரிக்கிறது, இது தோலை இளமையாகவும், பிரகாசமாகவும் வைக்கிறது. தேனில் உள்ள இயற்கையான ஈரப்பதமூட்டும் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள், முகப்பரு மற்றும் தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

(4 / 6)

எடை இழப்புக்கு உதவுகிறது : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. நெல்லிக்காய் குறைந்த கலோரி உணவு மற்றும் அதிக அளவு நார்ச்சத்து கொண்டது, இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இது கலோரி அதிகரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல், இனிப்பு உணவுகளின் மீதான ஆசையையும் குறைக்கிறது.

(5 / 6)

கண் ஆரோக்கியம் : நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின் சி மற்றும் ஏ கிடைக்கும். இது ரெட்டினாவின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்