Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு   /  Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்

Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jun 18, 2024 07:35 PM IST

Lord Guru: இத்தனை நாட்களாக கதறியவர்களுக்கு ஆறுதல் கிடைக்கப்போகிறது. ரோகிணியில் ஏறிய குரு பகவானால் சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்
Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்

குரு பகவான், ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணிப்பார். அதேநேரம் சில நட்சத்திரங்களை மாற்றி டிராவல் செய்வார். தவிர, குரு பகவான், உதய நிலை, அஸ்தமன நிலை, நட்சத்திரப் பெயர்ச்சி ஆகியவற்றிலும் ஈடுபடக் கூடியவர்.

கடந்த மே 1ஆம் தேதி, குரு பகவான், ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். செல்வந்தர் ஆகும் நிலை, கவுரவம், கல்யாண வாழ்வு, பகுத்தறிதல் ஆகியவற்றுக்கு குரு பகவான் காரணகர்த்தாவாக இருக்கிறார். குரு பகவான், ஜூன் 13ஆம் தேதி, ரோகிணி நட்சத்திரத்துக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். சந்திரன் அதிபதியாக இருக்கும் ரோகிணி நட்சத்திரத்தினால், சில ராசியினருக்கு கூடுதலான பண வரவு கிட்டும். அப்படி, வாழ்க்கையில் ரோகிணி நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ரிஷபம்:

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைவதால், ரிஷப ராசியில் இருப்பவர்களுக்கு இழந்ததைப் பெறும் சக்தி கிட்டும். இந்த காலத்தில் பகுத்தறியும் திறனும், நல்ல அறிஞர்களின் நட்பும் கிடைக்கும். இதனால், பணியில் திறன் மேம்படும். இன்சென்டிவ் முழுமையாக கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவர். பணியிடத்தில் சகப் பணியாளர்கள் ஊக்கம் கொடுப்பார்கள். உயர் அலுவலர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்:

குரு பகவான், ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி இருப்பது, சிம்ம ராசியினருக்கு இந்த காலத்தில் நல்ல பலன்களைத் தரும். சிம்ம ராசியினருக்கு, பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் நீங்கள் முயற்சி செய்து தோற்றுப்போன அனைத்தும் உங்களது கைவசம் வந்து சேரும். இப்போது நீங்கள் செய்யும் முதலீடுகளால், எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்டுவீர்கள். வெகுநாட்களாகத் துவங்க நினைத்து, துவங்காமல் இருந்த தொழிலை இந்த காலத்தில் துவங்கலாம். அப்படி, தொழில் துவங்கப் பணம் இல்லாமல் இருந்தாலும், இக்காலத்தில் முயற்சித்தால் கடன் வசதி கிடைக்கும். உடல் நலனைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பீர்கள். உங்களை எதிரிகளாக நினைத்தவர்கள் மனம் மாறி, உங்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்வார்கள்.

கன்னி:

குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனதால், கன்னி ராசியினருக்கு கவலைகள் தீரும். இறைநம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். உங்களது இனிமையான பேச்சினால், நீங்கள் நினைத்த லாபத்தைப் பெறுவீர்கள்.

துலாம்:

குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதால், துலாம் ராசியினருக்கு கடன் தொல்லைகள் நீங்கும். சுற்றம் மற்றும் நட்புக்கள் இடையே இருந்த மரியாதை கூடும். வாழ்க்கையில் தினமும் இருந்த மாமியார் - மருமகள் பிரச்னை, பணியிடத்தில் இருந்த புறக்கணிப்பு ஆகியவை மெல்ல மெல்ல சரியாகும். உங்களது தொழில் செய்யுமிடத்தில் கிடைத்த நற்பெயரால் அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், மற்றும் உடல்நலம் சார்ந்த பிற அரிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்தப் புகைப்படங்கள் பிரிவைப் பார்க்கவும்.