தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Politics Rasis: அரசியலில் தலைமைப் பீடத்துக்கு சென்று வெல்லப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி என்ன?

Politics Rasis: அரசியலில் தலைமைப் பீடத்துக்கு சென்று வெல்லப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி என்ன?

Apr 16, 2024 09:42 PM IST Marimuthu M
Apr 16, 2024 09:42 PM , IST

  • Politics Rasis: அரசியலில் ஆளுமைச் செலுத்தக் கூடிய ராசிகள் குறித்துக் காண்போம்.

Politics Rasis: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவமான குணம் இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு, நல்ல விதமான தலைமைப் பண்புகள் தானாகவே இருக்கும். இந்நிலையில் ஜோதிடக் கணிப்புகளை முன்கூட்டியே அறிந்து, அரசியலில் இறங்கினால் சில ராசியினர் மிக டாப் லெவலுக்குச் செல்வார்கள். அப்படி பிறப்பின் ரகசியத்திலேயே அரசியலில் ஆளுமை செலுத்தக்கூடிய ராசிகள் குறித்துக் காண்போம்.

(1 / 6)

Politics Rasis: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவமான குணம் இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு, நல்ல விதமான தலைமைப் பண்புகள் தானாகவே இருக்கும். இந்நிலையில் ஜோதிடக் கணிப்புகளை முன்கூட்டியே அறிந்து, அரசியலில் இறங்கினால் சில ராசியினர் மிக டாப் லெவலுக்குச் செல்வார்கள். அப்படி பிறப்பின் ரகசியத்திலேயே அரசியலில் ஆளுமை செலுத்தக்கூடிய ராசிகள் குறித்துக் காண்போம்.(REUTERS)

மேஷம்: 12 ராசிகளில் முதல் ராசியாக இருக்கும் மேஷம், ஆளுமைப் பண்புகளை எளிதில் பெற்று இருக்கும் ராசியாகும். மேஷ ராசியினர் எந்தவொரு நிலையிலும் தன்னிறைவு அடையாதவர்கள். அடுத்து என்ன அடுத்து என்ன நமக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆர்வமுடன் பணியாற்றக் கூடியவர்கள். இவர்களுக்குப் பதவிமேல் இருக்கும் ஆசை, தலைமைப் பண்பு ஆகிய காரணங்களால், தெளிவான குரல் வளத்தைக் கொண்டிருப்பர். இவரது பேச்சுக்குப் பலர் மயங்கக் கூடும். அரசியல் பலம் மிக்கவர்களாக இவரது நடத்தையும் பேச்சும் மாற்றும். மேஷ ராசியினர் தங்களுக்கு என்று ஒரு கோடு கிழித்து வாழக் கூடியவர்கள். 

(2 / 6)

சிம்மம்: இந்த ராசியினர், அரசியல் ரீதியாக வெல்லக்கூடியவர்கள். சிம்ம ராசியினர் பிறப்பிலேயே ஆளுமையும் சாதுரியமும் மிக்கவர்கள். சிம்ம ராசியினர், தோரணை, அணுகுமுறை பிற மக்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கையை உண்டு செய்யும். சிம்ம ராசியினர், வசீகர செயல்பாட்டின் காரணமாக பொதுவெளியில் நம்பிக்கையையும் நற்பெயரையும் பெற்று இருப்பர். 

(3 / 6)

துலாம்: இந்த ராசியினர் தராசினைப் போல செயல்படக் கூடியவர்கள். துலாம் ராசியினர், அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்கக் கூடியவர்கள். முடிந்தவரை நியாயமானவர்களாகவும், நீதி மற்றும் கர்மவினைகளின் சராம்சத்தை நம்புபவர்களாகவும் இருக்கின்றனர். துலாம் ராசியினர், சமயோசித குணமிக்கவர்களாகவும் வருங்காலத்தைப் பற்றி நுணுக்கமாக திட்டமிட்டு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பண்பும் மிக்கவர்கள். துலாம் ராசிக்காரர்கள் எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் சமரசமாகப்பேசி,  காரியத்தை முடிக்கக் கூடியவர்கள். சிறந்த ஒத்துழைப்பினையும் தரக்கூடியவர்கள். துலாம் ராசியினரின் லாவகமானப்பேச்சு, நடந்தை, போக்கு அவர்களை அரசியல் அரங்கில் முதன்மையானவர்களாக ஆக்குகின்றன. 

(4 / 6)

மகரம்: மகர ராசியினர், நுட்பமாக யோசிப்பதில் கில்லாடிகள். இவரது ராசியை சனி கிரகம் ஆட்சி செய்கிறது. மகர ராசியினருக்கு, நீண்ட கால செயல்திட்டம் இருக்கிறது. மிகப்பெரிய கனவுடன் விடாமல் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். மகர ராசியினரின் தொடர்முயற்சி,கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை அவர்களை சமூகத்தில் நல்லபெயர் பெற்றவர்களாக மாற்றும். அது மகர ராசியினரை அரசியலுக்குள் செல்ல வைத்துவிடும். மகர ராசியினருக்கு அடிப்படையில்  மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். நிகழ்கால செயல்பாடுகள், பொறுப்பாக இருப்பதன் மூலம், அரசியலில் அதிகபட்ச வெற்றியைப் பெறுவீர்கள்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்