தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  The Zodiac Signs That Will Get Peace Of Mind Due To Transit Of Sani

Sani: சனியின் வக்ர பெயர்வு.. மன நிம்மதி பெறப்போகும் ராசிகள்

Feb 11, 2024 07:27 AM IST Marimuthu M
Feb 11, 2024 07:27 AM , IST

  • சனியின் வக்ர பெயர்வால் சிலர் வாழ்வில் நடக்கப்போகும் ஏற்ற இறக்கங்கள் குறித்துப் பார்க்கலாம்.

சனி பகவானின் பார்வை ஒருவரது ராசியில் நல்லமுறையில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளையும், மோசமான நிலையில் வாழ்வில் ஏராளமான பிரச்னைகளையும் உருவாக்குவார். கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனிபகவான் வரும் ஜூலை மாதம் முதல் வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். இதனால் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சில ராசியினர் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் குறித்துக் காண்போம். இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் பயணிக்கும் சனி பகவான், ஆண்டுக்கு ஒரு முறை வக்ரமடைந்து, பயணிக்கவுள்ளார். அக்கால கட்டத்தில் சனிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறார். வரும் ஜூன் 29ஆம் தேதி (ஆனி 15), சனி பகவான் வக்ர காலம் ஆரம்பித்து நவம்பர் 15ஆம் தேதி (ஐப்பசி 29ஆம் தேதி) வக்ர நிவர்த்தியடைகிறார். இந்த வக்ர காலத்தில், சனி பகவானால் பாதிக்கப்பட்ட ராசிகளுக்குப் பாதிப்பு ஓரளவுக்குக் குறையும். அத்தகைய ராசிகள் குறித்துக் காண்போம்.

(1 / 7)

மேஷம்: சனி பகவானின் இந்த வக்ர காலத்தில் சிலருக்கு வேறு ஒரு இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சிக்கல் இருப்பவர்கள், இக்காலத்தில் முயற்சித்தால் பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள். உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். பைக் வாங்கும் ஏற்ற காலகட்டம் இது.

(2 / 7)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு பத்தாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். சனி பகவானின் வக்ர காலகட்டத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். கடினமாக உழைக்கவேண்டிய காலகட்டம் இது. மேற்படிப்புப் படிப்பவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதில் சிக்கல் வந்து மறையும். உடன் பிறந்தவர்களுடம் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளவும். எதிலும் எச்சரிக்கையோடு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயலாற்றுங்கள்.

(3 / 7)

கடகம்: இந்த ராசியினருக்கு கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். இக்கால கட்டத்தில் சனி பகவானின் கெடு பலன்கள் கடக ராசியினருக்குக் குறைவாகவே இருக்கும்.

(4 / 7)

சிம்மம்: இந்த ராசியினர், சனியின் வக்ர காலத்தில் மனதில் தெளிவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை பெருகும். பேராசைப் படாதீர்கள்; பெரு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதியவேலைக்குச் செல்ல முயற்சிக்காதீர்கள். விரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இக்காலத்தில் வீடு கட்டுங்கள். வம்ச விருத்தி ஏற்படவாய்ப்புள்ளது.

(5 / 7)

கன்னி: இந்த ராசியினருக்கு சனியின் வக்ர காலத்தில் புதிய சொத்துகள் சேரலாம். பணியிடத்தில் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். இருந்தாலும் சிலர் உதவுவார்கள். புதல்வன் மற்றும் புதல்வியால் படிப்புக்கு உண்டான செலவு அதிகரிக்கும். சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்