தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Venus: கூடுவிட்டுகூடு மாறுவதுபோல் நட்சத்திரம் மாறும்சுக்கிரன்.. யாருக்கெல்லாம் லக் அடிக்கிறது தெரியுமா?

Lord Venus: கூடுவிட்டுகூடு மாறுவதுபோல் நட்சத்திரம் மாறும்சுக்கிரன்.. யாருக்கெல்லாம் லக் அடிக்கிறது தெரியுமா?

Apr 19, 2024 05:39 PM IST Marimuthu M
Apr 19, 2024 05:39 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார். 

(1 / 6)

இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் மே 05ஆம் தேதி வரை, சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இந்த 10 நாட்களும் சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். அதுமட்டுமல்லாமல், அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். அதனால் இந்த சேர்க்கை சிலருக்கு தொழிலில் லாபத்தையும், அயல்நாடு செல்லும் யோகத்தையும், ஆளுமைப் பண்பையும் வளர்க்கிறது.அப்படிப்பட்ட இந்த சுக்கிரனின் நட்சத்திரப்பெயர்ச்சியால் லாபம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

மேஷம்: சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியின்படி, மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால், சுக்கிரபகவான் மேஷத்தின் முதல் இல்லத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மேஷ ராசியினருக்கு தலைமைப் பண்புகள் கூடும். பணியிடத்தில் புரோமோஷன் கிடைக்கும். தொழில் முனையும் மேஷ ராசியினருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். எக்கச்சக்கமான நற்பலன்களைப் பெறுவீர்கள். உடல்நலம் சரியாகும். காலில் இருந்த பிரச்னைகள், கண்ணில் இருந்த பிரச்னைகள் சரியாகும். இடையில் சண்டையினால் பேசாமல் இருந்த காதலர்கள், இந்த காலத்தில் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிடுவர். கல்யாண வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சரியாகும். உங்களுடைய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் உண்டான பணம் வந்துசேரும். இந்த காலத்தில் பணத்தை நல்ல முறையில் சேமிக்கக் கற்றுக்கொள்வீர்கள்.

(3 / 6)

கன்னி: சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியின்படி, மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால், கன்னி ராசியினர் சிறப்புமிக்க பலன்களைப் பெறப்போகிறீர்கள். இத்தனை நாட்களாக உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் இருந்த நபர்கள்,இந்த காலத்தில் மனம் திருந்தி வந்து வாங்கிய பணத்தைக் கையில் கொடுப்பர். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். வணிகம் செய்யும் நபர்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சில யுக்திகளும் வசப்படும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குவியும். இத்தனை நாட்களாக சம்பாதித்த பணத்தை ஏதாவது ஒருவகையில் இழந்தீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் அதனை மீண்டும் சம்பாதிப்பீர்கள்.

(4 / 6)

மிதுனம்: சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியின்படி, மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால், மூன்றாம் இல்லத்தில் வசிக்கும் மிதுன ராசியினருக்கு நற்பெயர் கிடைக்கும். இக்கால கட்டத்தில் மூளை சுறுசுறுப்பாகும். தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு மாற்றுசிந்தனை பெருகும். அது லாபமாக மாறும். பணியிடத்தில் உங்களின் திறமையைப் பார்த்து சம்பளத்தில் உயர்வு வரலாம். உங்களது மேலதிகாரியின் குட்புக்கில் நீங்கள் இடம்பெயர்வீர்கள். காதல் செய்துகொண்டு இருக்கும் மீன ராசியினர், இருவீட்டாரின் சம்மதத்தைப் பெற இக்காலம் ஏற்றது. உறவில் பிரிந்துபோனவர்கள் உங்களது நல்ல குணத்தைப் பார்த்து ஒன்றுசேர்வார்கள். இந்த காலத்தில் மிதுன ராசியினர் பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்