Transit Of Venus 2024: மிதுனத்தில் ஏறும் சுக்கிர பகவான்.. நல்லதையும் கெட்டதையும் ஒருசேர அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்!
Transit Of Venus 2024:: சுக்கிரன் ஜூன் 12ஆம் தேதி மிதுனத்தில் நுழையவுள்ளார். சுக்கிர பகவானின் நுழைவால், நல்ல மற்றும் கெட்ட பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
(1 / 6)
இந்திய ஜோதிடத்தில், சுக்கிர பகவான் காதல், திருமணம் மற்றும் பொருள் வசதிகளுக்குக் காரணமான கிரகமாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் மகிழ்ச்சி சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி, சுக்கிர பகவான் ஜூன் 12, 2024அன்று மாலை 6:15 மணிக்கு மிதுனத்தில் நுழைகிறார். மேஷம் மற்றும் ரிஷபம் உள்ளிட்ட இந்த ராசிகளில் சுக்கிர பகவான் கலவையான விளைவுகளை ஏற்படுத்துவார். ஆனால், சில ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறார் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
(2 / 6)
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, சுக்கிர பகவான் இரண்டாவது மற்றும் ஏழாவது வீடுகளின் அதிபதியாக இருக்கிறார். சுக்கிர பகவான், ஜூன் 12ஆம் தேதி மிதுனராசியில் சஞ்சரிக்கவுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம். நண்பர்களால் ஏமாற்றத்தை உண்டாக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஒரு நல்ல வேலையைப் பெற முடியும். மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனை மகிழ்விக்க தினமும் ஓம் சுக்கிரா என்று நாம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
(3 / 6)
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, சுக்கிர பகவான் முதல் மற்றும் ஆறாம் வீடுகளுக்கு அதிபதியாகவுள்ளார். சுக்கிர பகவானின் ஆதிக்கத்தால் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சற்று பதற்றம் ஏற்படலாம். புதிய வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். ஆரம்பத்தில் பதற்றம் இருக்கலாம். ஆனால் உங்கள் கடின உழைப்பில் வெற்றி பெறுவீர்கள். ரிஷப ராசிக்காரர்கள் ஓம் பார்கவத்தில் நமஹ என்னும் மந்திரத்தை தினமும் 33 முறை உச்சரிக்க வேண்டும்.
(4 / 6)
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் 4ஆவது மற்றும் 11ஆவது வீடுகளுக்கு அதிபதி, ஜூன் 12ஆம் தேதி, சுக்கிர பகவான் 12ஆவது வீட்டில் நுழைவார். சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். குடும்பத்தில் டென்ஷன் ஏற்படலாம். மாமியாரால் பிரச்னைகள் அதிகரிக்கலாம். நீங்கள் தேவையற்ற இடத்திற்கு மாற்றப்படலாம். ஆரோக்கிய பிரச்னைகள் அதிகரிக்கலாம். கடக ராசிக்காரர்கள் சனிக்கிழமை சுக்கிர கிரகத்தை சாந்தப்படுத்த ராகு யாகம் செய்ய வேண்டும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:-இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்