தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ranveer Singh: ரன்வீரால் அதகளமான ஆடிசன்.. முதல் 2 ஆண்டுகளிலேயே கோடியில் சம்பளம்: எளிய குடும்பத்தில் பிறந்த ரன்வீரின் கதை

Ranveer Singh: ரன்வீரால் அதகளமான ஆடிசன்.. முதல் 2 ஆண்டுகளிலேயே கோடியில் சம்பளம்: எளிய குடும்பத்தில் பிறந்த ரன்வீரின் கதை

Jul 06, 2024 12:46 PM IST Marimuthu M
Jul 06, 2024 12:46 PM , IST

  • Ranveer Singh:  எளிய குடும்பத்தில் பிறந்த ரன்வீர் சிங், தனது ஆடிசனில் இறங்கி நடித்து, பாலிவுட்டில் முதல் வாய்ப்பைப் பெற்றார். அடுத்தடுத்த ஹிட்டுக்களால் இந்தியில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அவர் ஜெயித்த கதையைப் பார்ப்போம்.

ரன்வீர் சிங், பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளைப் பெற்றவர். கடந்த 2012ஆம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட அதிக சம்பளம்பெறும் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்ற இளம் நடிகர், ரன்வீர் சிங் ஆவார். இன்று தனது 39ஆவது பிறந்தநாள் காணும் நடிகர் ரன்வீர் சிங் குறித்து அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.

(1 / 6)

ரன்வீர் சிங், பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளைப் பெற்றவர். கடந்த 2012ஆம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட அதிக சம்பளம்பெறும் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்ற இளம் நடிகர், ரன்வீர் சிங் ஆவார். இன்று தனது 39ஆவது பிறந்தநாள் காணும் நடிகர் ரன்வீர் சிங் குறித்து அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.(REUTERS)

யார் இந்த ரன்வீர் சிங்?:மும்பையில் வசிக்கும் அஞ்சு மற்றும் ஜக்ஜித் சிங் பவ்னானி தம்பதியினரின் மகனாக 1985ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி பிறந்தவர், ரன்வீர் சிங். இவரது இயற்பெயர் ரன்வீர் சிங் பவ்னானி. அடிப்படையில் இவரது குடும்பத்தினர் சிந்தி வம்சாவளியைச் சார்ந்தவர்கள். குறிப்பாக, இவரது தாத்தா மற்றும் பாட்டி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவின் மும்பை நகரில் குடியேறியவர்கள் ஆவர். ரன்வீர் சிங்கிற்கு ஒரு அக்கா மட்டும் உடன்பிறந்தவர் ஆவார். அவரது பெயர் ரித்திகா பவ்னானி.

(2 / 6)

யார் இந்த ரன்வீர் சிங்?:மும்பையில் வசிக்கும் அஞ்சு மற்றும் ஜக்ஜித் சிங் பவ்னானி தம்பதியினரின் மகனாக 1985ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி பிறந்தவர், ரன்வீர் சிங். இவரது இயற்பெயர் ரன்வீர் சிங் பவ்னானி. அடிப்படையில் இவரது குடும்பத்தினர் சிந்தி வம்சாவளியைச் சார்ந்தவர்கள். குறிப்பாக, இவரது தாத்தா மற்றும் பாட்டி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவின் மும்பை நகரில் குடியேறியவர்கள் ஆவர். ரன்வீர் சிங்கிற்கு ஒரு அக்கா மட்டும் உடன்பிறந்தவர் ஆவார். அவரது பெயர் ரித்திகா பவ்னானி.(PTI)

ரன்வீர் சிங், சிறுவயதில் இருந்தே பெரிய நடிகராகவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார். ரன்வீர் சிங்கின் தந்தை வழியில் உறவினரான பாட்டி சந்த் பார்க் குணச்சித்திர நடிகையாக இருந்தவர். ரன்வீர் சிங்கின் அம்மா வழி உறவினர் சுனிதா, நடிகர் அனில் கபூரை திருமணம் செய்திருந்தார். தங்கள் உறவினர்கள் சிலர் நடிப்புத் தொழிலில் இருந்தது சிறுவயதிலேயே ரன்வீரை ஏதோ ஒரு வழியில் பாதித்தது. இதன்விளைவாக பள்ளி நாடகங்கள் மற்றும் நடிப்புத்தொடர்பான நிகழ்வுகளில் ரன்வீர் கலந்துகொண்டு ஃபெர்மான்ஸ் செய்வார். அதற்கு அவரது நண்பர்கள் ஆதரவுகொடுத்து உற்சாகப்படுத்தினர்.

(3 / 6)

ரன்வீர் சிங், சிறுவயதில் இருந்தே பெரிய நடிகராகவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார். ரன்வீர் சிங்கின் தந்தை வழியில் உறவினரான பாட்டி சந்த் பார்க் குணச்சித்திர நடிகையாக இருந்தவர். ரன்வீர் சிங்கின் அம்மா வழி உறவினர் சுனிதா, நடிகர் அனில் கபூரை திருமணம் செய்திருந்தார். தங்கள் உறவினர்கள் சிலர் நடிப்புத் தொழிலில் இருந்தது சிறுவயதிலேயே ரன்வீரை ஏதோ ஒரு வழியில் பாதித்தது. இதன்விளைவாக பள்ளி நாடகங்கள் மற்றும் நடிப்புத்தொடர்பான நிகழ்வுகளில் ரன்வீர் கலந்துகொண்டு ஃபெர்மான்ஸ் செய்வார். அதற்கு அவரது நண்பர்கள் ஆதரவுகொடுத்து உற்சாகப்படுத்தினர்.(PTI)

ரன்வீர் சிங், மும்பையில் உள்ள ஹெச்.ஆர்.காலேஜ் ஆஃப் காமர்ஸ் மற்றும் எகனாமிக்ஸ் துறையில் படிக்கும்போதுதான், தன் நடிப்பு ஆசை அத்தனை எளிதல்ல; மிகச்சவாலானது என்பதைப் புரிந்துகொண்டார். அதன்பின், அவரது குடும்பத்தினரின் ஆதரவினால், அமெரிக்கா சென்ற ரன்வீர் சிங், அங்கு புளோமிங்டனில் இருக்கும் இந்தியானா பல்கலைக்கழகத்தில், டெலி கம்யூனிகேஸன் துறையில் படித்தார்.படித்துமுடித்து மும்பை திரும்பியது சில விளம்பர நிறுவனங்களில் நல்ல கட்டுரைகளை, ஸ்கிரிப்ட்களை எழுதும்பணியில் இருந்தார். பின் சில காலம், உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பின், அதில் இருந்து வெளியேறி மும்பையில் நடிப்புக்காக நடந்த அனைத்துவிதமான ஆடிசனிலும் பங்கு எடுத்தார். ஆனால், அவருக்கு வந்தது என்னவோ, சின்னஞ்சிறு ரோல்கள் தான்.

(4 / 6)

ரன்வீர் சிங், மும்பையில் உள்ள ஹெச்.ஆர்.காலேஜ் ஆஃப் காமர்ஸ் மற்றும் எகனாமிக்ஸ் துறையில் படிக்கும்போதுதான், தன் நடிப்பு ஆசை அத்தனை எளிதல்ல; மிகச்சவாலானது என்பதைப் புரிந்துகொண்டார். அதன்பின், அவரது குடும்பத்தினரின் ஆதரவினால், அமெரிக்கா சென்ற ரன்வீர் சிங், அங்கு புளோமிங்டனில் இருக்கும் இந்தியானா பல்கலைக்கழகத்தில், டெலி கம்யூனிகேஸன் துறையில் படித்தார்.படித்துமுடித்து மும்பை திரும்பியது சில விளம்பர நிறுவனங்களில் நல்ல கட்டுரைகளை, ஸ்கிரிப்ட்களை எழுதும்பணியில் இருந்தார். பின் சில காலம், உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பின், அதில் இருந்து வெளியேறி மும்பையில் நடிப்புக்காக நடந்த அனைத்துவிதமான ஆடிசனிலும் பங்கு எடுத்தார். ஆனால், அவருக்கு வந்தது என்னவோ, சின்னஞ்சிறு ரோல்கள் தான்.(ANI)

திருப்புமுனை தந்த திரைவாழ்வு:2010ஆம் ஆண்டு, 'பந்த் பஜா பாரத்’ என்னும் பாலிவுட் காமெடி திரைப்படத்திற்கு நடந்த ஆடிஷனில் பங்கு எடுத்த, ரன்வீர் சிங் தனது வித்தியாசமான அலப்பறையான நடிப்பால் பலரை ஈர்த்து இருக்கிறார். இதைப் பார்த்த யாஷ்ராஷ் ஃபிலிம்ஸின் ஆதித்ய சோப்ராவும், இந்த காமெடி படத்துக்கு இவர் தான் ஹீரோ என டிக் அடித்திருக்கிறார். இதன்மூலம் முதல் படத்திலேயே அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றாராம். இப்படத்தில் டெல்லிவாசியாக நடிப்பதற்காக, டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுடன் சிறிதுகாலம் தங்கியிருந்தார், நடிகர் ரன்வீர் சிங். இப்படம் சத்தமில்லாமல் வந்து பெரிய ஹிட்டானது. இப்படத்தில் நடித்தமைக்காக முதல் அறிமுக ஃபிலிம்பேர் விருதையும் வென்றார், ரன்வீர் சிங். அதன்பின் வந்த ரொமான்ஸ் காமெடியான ’லேடீஸ் வெர்ஸஸ் ரிக்கி பால்’ என்னும் படத்திலும் தன்னுடைய முதல் பட கதாநாயகியான அனுஷ்கா சர்மாவுடன் மீண்டும் நடித்தார். அதன்பின், 2013ஆம் ஆண்டு லோடேரா, பின்னர் 2013ஆம் ஆண்டிலேயே இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியான் கி ராசலீலா ராம்லீலா’படத்தில் நடித்தார். இப்படத்தில், முதன்முதலாக தன் வருங்கால வாழ்க்கைத்துணை தீபிகா படுகோனே எனத்தெரியாமல் இருந்தபோதே, இருவரும் ரீல் ஜோடியாக நடித்தனர். இப்படம் உலகளவில் 202 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல், ரன்வீர் சிங்குக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப்பெற்றுத்தந்தது.  இந்த வெற்றி இருவரையும் தொடர்ந்து பயணிக்க வைத்தது தனிப்பட்ட வாழ்க்கையில். இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். அதேபோல், இந்த ஜோடி 2018ஆம் ஆண்டு தங்கள் இருகுடும்ப வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். தற்போது தீபிகா கர்ப்பிணியாக இருக்கிறார். 

(5 / 6)

அதன்பின்,குண்டே, கில் தில், தில் தடக்னே டோ என ரன்வீருக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் தான். அதில் தில் தடக்னே டோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாகி, ரன்வீர் சிங்கின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அடுத்து மீண்டும் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடித்து வரலாற்றுத்திரைப்படமான ‘பஜிராவ் மஸ்தானி’ திரைப்படம், 350 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து பத்வத், டிஃபா இன் டிராபிள், ஸிம்பா, கல்லி பாய் மற்றும் 83( உலகக்கோப்பையில் 83ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் வென்றது தொடர்பான உண்மைக்கதை), சிர்குஸ், ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி போன்ற அடுத்தடுத்து படங்களில் நடித்து ஹிட் நடிகராகியுள்ளார். தற்போது சிங்கம் ஏகைன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்