K. J. Yesudas: பிறப்பால் ஒரு கிறிஸ்தவன்.. ஆட்கொண்ட ஐயப்பன்.. சபரிமலையில் ஒலித்த அரிவராசனம்.. கே.ஜே.யேசுதாஸின் கதை!
- கே.ஜே.யேசுதாஸ் என்று உலக அளவில் அறியப்படும் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரின் வரலாற்று சிறப்புமிக்க பக்கங்களை சற்று புரட்டி பார்ப்போம்.
- கே.ஜே.யேசுதாஸ் என்று உலக அளவில் அறியப்படும் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரின் வரலாற்று சிறப்புமிக்க பக்கங்களை சற்று புரட்டி பார்ப்போம்.
(1 / 6)
உலகம் முழுக்க மக்களை தனது குரலால் மயக்குபவர். வசீகர குரலுக்கு சொந்தக்காரர். பிரபல திரைப்பட இசை பாடகராகவும் கர்நாடக இசை கலைஞராகவும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சாதனை செய்பவர், கே.ஜே.யேசுதாஸ்.
(2 / 6)
கே.ஜே.ஜோசப் யேசுதாஸ், கேரளாவில் கொச்சி நகரில் லத்தீன் கத்தோலிக் கிறிஸ்தவ குடும்பத்தில், அகஸ்டின் ஜோசப் மற்றும் எலிசபெத் ஜோசப் ஆகிய தம்பதியினருக்கு 7 குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக 1940ஆம் ஆண்டு, ஜனவரி 10ஆம் தேதி பிறந்தார். இவர் தனது தந்தையின் நண்பர் குஞ்சன் வேலு பாகவதரிடம் இசையைக் கற்றார். இவர் தான் யேசுதாஸின் முதல் குரு.
(3 / 6)
தமிழ் மொழியில் முதல் பாடலை பொம்மை என்ற படத்தில் பாடினாலும் கூட இவரது குரலில் வேதா இசையில் கொஞ்சும் குமரி முதலில் வெளிவந்த படமாக அமைந்தது. இந்தியில் கோடிசிபாத் என்ற படம் முதல் படமாக அமைந்தது. இளம் வயதிலேயே அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 1970க்கு பின் இந்தி உள்ளிட்ட வடமொழி பாடல்களையும் பாடி தேசிய அளவில் பிரபலமான பாடகர் ஆனார்.
(4 / 6)
கடல் தாண்டி ரஷ்யா, அரபு, மலாய், லத்தீன், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் தனது குரலை உலகெங்கும் கேட்க செய்தார். இந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தனது இசை பயணத்தில் ஐம்பதாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி உள்ளார். 1980-ல் தரங்கிணி என்ற பெயரில் ஒரு இசை நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் தனது திரைப்பட பாடல்கள், தனிப்பட்ட பாடல் ஆல்பம், ஆன்மிக பாடல்கள் ஆகிய இசைத்தட்டுகளை வெளியிட்டனர்.
(5 / 6)
பிறப்பால் இவர் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் ஐயப்பன் மீது கொண்ட பக்தியினால், அதிக அளவில் ஐயப்பன் பக்தி பாடல்களை பாடியவர். இவர் பாடிய அரிவராசனம் என்னும் பாடல் தான், சபரிமலையில் சந்நிதானம் திறப்பு மற்றும் அடைக்கும்போது ஒலிபரப்பப்படும் பாடல் ஆகும். சாகித்திய அகாடமி விருது, பத்மஶ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசண் விருதுகள் பெற்றவர். கண்ணே கலைமானே என்று நம்மை தாலாட்டுவது ஆகட்டும்.. விழியே கதையெழுது என்று உருகுவதாகட்டும்.. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று அழுகுவதாகட்டும்.. ராஜராஜ சோழன் நான் என்று துள்ளல் ஆகட்டும்.. தெய்வம் தந்த வீடு என்று வலி ஆகட்டும்.. என் இனிய பொன் நிலாவே என்று மயக்குவதாகட்டும்.. வைகை கரை காற்றே நில்லு என்று கெஞ்சுவதாகட்டும்.. செந்தாழம்பூவில் மலர்ச்சியாகட்டும்.. தென்றல் வந்து வருடுவதாகட்டும்.. ஆராரிரோ பாடியதாரோ என அழுகையாகட்டும்... ஹரிவராசனம்.. சரணம் ஐயப்பா என்று பக்தியில் திளைப்பது ஆகட்டும் இப்படி உணர்வுகளை நம் இதயத்துக்குள் கடத்தும் கான கந்தர்வன்.
மற்ற கேலரிக்கள்