Kannadasan : கண்ணதாசனை நக்கல் செய்த இயக்குநர்.. பாட்டால் பதிலடி கொடுத்து மாஸ் காட்டிய கவியரசு!
ஆலயமணி படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
(1 / 5)
நட்பு மற்றும் காதல் இந்த இரண்டு உணர்வுகளையும் உரக்க சொன்ன திரைப்படம் தான் ஆலயமணி.இந்த திரைப்படத்தை கே.சேகர் இயற்றினார். நடிகர் பி.எஸ்.வீரப்பா இந்த திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தமாக நடித்திருப்பார்கள். சிவாஜி கணேசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கதாபாத்திரத்தை நகல் எடுத்தது போல் நடித்திருப்பார். திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இருந்து வருகின்றது என கூறினால் அது மிகையாகாது. கண்ணதாசன் வார்த்தைகளால் விளையாடியிருப்பார்.
(2 / 5)
அப்படி இப்படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
(3 / 5)
இந்த திரைப்படத்திற்கு கண்ணதாசன் தான் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். ஆனால் ஒரு பாடல் மட்டும் எழுதாமல் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அனைத்து பாடல்களையும் விரைவாக எழுதி முடித்த கண்ணதாசன் இந்த பாடலை எழுதாமல் நீண்ட நேரம் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால் கண்ணதாசனை நேரில் சந்தித்த இப்படத்தின் இயக்குனர் சங்கர் என்ன கவிஞரே மற்ற பாடல்களை மாதிரி சட்டி சுட்டதடா கை விட்டதடா அப்படின்ற மாதிரி பாடலை சீக்கிரம் எழுதிக் கொடுத்தீர்கள். அதே மாதிரி இப்பாடலையும் எழுதி கொடுக்க வேண்டியது தானே. இதில் ஏன் தாமதம் எனக் கேட்டுள்ளார்
(4 / 5)
அவர் சொன்னதை நன்கு கவனித்த கண்ணதாசன் இயக்குனர் சொன்னதையே பாடல் வரியாக மாற்றி விட்டார் இந்த பாடல் இப்படி தான் உருவானது .
மற்ற கேலரிக்கள்