தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajinikanth : ரஜினியை தர்ம சங்கடப்படுத்திய பிரபு.. சிவாஜி குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Rajinikanth : ரஜினியை தர்ம சங்கடப்படுத்திய பிரபு.. சிவாஜி குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Jun 09, 2024 01:41 PM IST Pandeeswari Gurusamy
Jun 09, 2024 01:41 PM , IST

  • Rajinikanth: சிவாஜி உயிருடன் இருந்த காலகட்டத்தில்  மேடையில்  பேசும்போது  என் மூத்த பிள்ளைகள் ரஜினி கமல் என்பார். அதை ரஜினியும் கமலும் அங்கீகரித்து கொண்டனர். பிரபுவின் அண்ணன் நான் என்றும் சொல்வார்கள். இதனால்  நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் இருக்க வேண்டும் என பிரபு முடிவு செய்யப்பட்டது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கும்கி என்ற திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை வைத்து தயாரித்தனர். இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். சிவாஜி கணேசனின் குடும்பத்தின் வாரிசு என்பதால் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. மக்களிடம் மட்டுமல்ல சினிமா இண்டஸ்ட்ரியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபு குடும்பத்திற்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்து சினிமா பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது V.K.Sundar updates என்ற யூடியூப் தளத்தில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். 

(1 / 8)

கும்கி படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை மிகப்பெரிய விழாவாக கொண்டாட வேண்டும் என்பது பிரபுவின் ஆசை. ஒரு அப்பாவாக தன் மகனுக்கு ஒரு பெரிய விழா எடுத்து பார்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இதை பிரபு லிங்கு சாமியிடம் சொல்கிறார். இதையடுத்து ஆடியோவை ரஜினி வெளியிட கமல் வாங்கி கொள்வது என முடிவு செய்தனர். இதற்கு ஒரு காரணம் உள்ளது. 

(2 / 8)

சிவாஜி உயிருடன் இருந்த காலகட்டத்தில் ஏதேனும் ஒரு மேடையில் இந்த இருவரும் இருந்தால் என்னுடைய மூத்த பிள்ளைகள் ரஜினி கமல் என்பார். அதை ரஜினியும் கமலும் அங்கீகரித்து கொண்டனர். பிரபுவின் அண்ணன் நான் என்றும் சொல்வார்கள். இதனால் தான் அந்த குடும்பத்தின் நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் இருப்பது பொருத்தமாக சிறப்பாக இருக்கும் என்று பிரபுவால் முடிவு செய்யப்பட்டது.

(3 / 8)

இதையடுத்து பிரபு அனுமதி பெற்று ரஜினியின் கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் போய் பார்க்கிறார். அப்போது ரஜினியிடம் இன்விடேஷனை குடுத்த போது இல்ல பிரபு .. எனக்கு அந்த தேதியில் வேறு ஒரு வேலை இருக்கு.. என்னால் வர வாய்ப்பு இல்லை . தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று ரஜினி மறுக்கிறார். இதனால் பிரபுக்கு முகம் வாடி விடுகிறது. சரி இன்விடேஷனை மட்டும வாங்கிகோங்க என்கிறார். அதற்கு ரஜினி இல்லை..இல்லை இன்விடேஷன் வாங்கி கொண்டால் கண்டிப்பாக விழாவுக்கு வரணும். என்னை தர்மசங்கட படுத்திடாதீங்க என்று ரஜினி சொல்லி இன்விடேசனை வாங்க மறுக்கிறார்.

(4 / 8)

இதனால் கவலையுடன் வெளியே வந்த பிரபு மனது கேட்காமல் ரஜினி அவர்கள் ஆபீஸில் இன்விடேஷனை கொடுத்து விட்டு செல்கிறார். பின்னர் பிரபு அலுவலகத்தில் இன்விடேஷன் கொடுத்து சென்ற தகவல் ரஜினிக்கு தெரிய வர பிரபு வீட்டுக்கு போன் போட்டு ஏன் பிரபு இப்படி பண்ணிட்டீங்க.. என்னை தர்ம சங்கட படுத்திட்டீங்களே.. நான் அவ்வளவு தூரம் இன்விடேஷன் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். மீறி இன்விடேஷன் கொடுத்துட்டு போயிருக்கீங்களே என்று கோவமாகவும் வருத்தமாகவும் சொல்லி போனை கட் செய்து விட்டார்.

(5 / 8)

இதையடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் வெளியிட சூர்யா வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது சத்தியம் தியேட்டரில் விழா நடந்த கொண்டிருந்த போது கமல் சூர்யா இருவரும் மேடையில் இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கி விழா நடைபெற்று கொண்டிருந்தபோது பிரபுவுக்கு ஒரு போன் வருகிறது. நிகழ்ச்சி தொடங்கியதால் பிரபு அந்த போனை எடுக்க வில்லை.

(6 / 8)

மீண்டும் மீண்டும் போன் வந்த போது அந்த போனை அட்டன் பண்ணி பிரபு பேசியபோது சார் ரஜினி சார் சத்தியம் தியேட்டர் வாசலில் இருக்கிறார் உடனே வாங்க என்றார் ரஜினியின் உதவியாளர். பிரபு பதற்றமாக வெளியே போய் ரஜினியை மேடைக்கு அழைத்து வருகிறார். அப்போது தியேட்டர் முழுவதும் இருந்தவர்கள் ஓ.. என சத்தமிட்டு எழுந்து நின்று வரவேற்றனர். மேடையில் ரஜினி பேசியபோது இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. வேலை இருக்கிறது என்று பிரபுவிடம் சொல்லி விட்டேன். 

(7 / 8)

அதுக்கப்பறம் யோசித்த போது நான் கண்டெக்டரா இருந்து சினிமாவுக்கு வரணும் என்று நினைச்சதே சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே.. அந்த பேமிலில ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது நாம வரவில்லை என்றால் எப்படி சரியாவரும் என்பதால் தான் நான் வந்தேன் என்று பேசினார். ரஜினியின் திடீர் வரவு சிவாஜி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது" என்று வி.கே சுந்தர் அதில் தெரிவித்துள்ளார்.

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்