Lord Sun: சிம்மத்தில் பெயரும் சூரியன்.. தொலைத்ததை மீட்டு கம்பீரமாக வாழப்போகும் ராசிகள்
- Sun Transit: ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வருடம் கழித்து, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் ஏறும் சூரிய பகவானால், நிதி நிலையில் ராஜாவாகி தேன் அடையை ருசிக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
- Sun Transit: ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வருடம் கழித்து, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் ஏறும் சூரிய பகவானால், நிதி நிலையில் ராஜாவாகி தேன் அடையை ருசிக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
Sun Transit: ஜோதிடத்தில், சூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றி, சஞ்சரிக்கிறார். அதன்படி, சூரிய பகவான், 12 ராசிகளில் சஞ்சரித்து மீண்டும் ஒரு ராசிக்கு வர ஒரு வருடம் ஆகும். இந்த நேரத்தில், சூரிய பகவான், கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் சுமார் 365 நாட்களுக்குப் பிறகு, சூரிய பகவான், தனது சொந்த ராசியின் அடையாளமான சிம்ம ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரிய பகவான், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை சூரிய பகவான் இதே ராசியில் சஞ்சரிப்பார். ஒரு ஆண்டு கழித்து சிம்ம ராசியில் சூரிய பகவான் வருவதால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
சிம்மம்:ஆகஸ்ட் மாதத்தில் சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், சூரிய பகவானின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். வரப்போகும் ஆண்டில் உங்கள் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் வளமாக இருப்பீர்கள். நிலம், கட்டடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அண்மையில் நீங்கள் எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த பணிகள் நீங்கும்.
(3 / 6)
ரிஷபம்:ஆகஸ்ட் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு, சூரிய பகவானின் ராசியின் மாற்றம் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைத் தரும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானப் பெருக்கத்துடன் பதவி உயர்வுக்கான அறிகுறிகளும் தென்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேறு ஒருவரின் உதவிக்கு கொடுத்து கிடைக்காமல் இருந்த பணத்தை திரும்பப் பெறலாம். உங்களது முரட்டுத்தனமான சுபாவம் மறைந்து, உங்களது இனிமையான பேச்சினால் பலரைக் கவர்வீர்கள்.
(4 / 6)
தனுசு:தனுசு ராசிக்காரர்களுக்கு, சூரிய பகவானின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தாங்கும். வரப்போகும் ஆண்டில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடும் தனுசு ராசியினர் நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் ஒரு பெரிய நிதி முடிவை எடுக்கலாம். இது எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறும். தனுசு ராசியினரின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக இருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி தெளிவு பிறக்கும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்