The Modern Theatres Ltd: ‘மாடர்ன் தியேட்டர்ஸ் பெருமையும்.. பேரும் தெரியுமா?’ அறியாத தகவல்கள் இதோ!
- Salem Modern Theatres: மாடர்ன் தியேட்டர் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?
- Salem Modern Theatres: மாடர்ன் தியேட்டர் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?
(1 / 6)
பல பேசும் படங்களை தயாரித்த, உருவாக்கிய நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், இன்று பேசு பொருளாக மாறியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என தமிழக முதல்வர்கள் பலரின் முகவரியாக இருந்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி, நீங்கள் அறியாத தகவல்களை இங்கு காணலாம்.
(2 / 6)
மாடர்ன் தியேட்டர்ஸ் 1935 ஆம் ஆண்டில் டி.ஆர்.சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவரால் நிறுவப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் "சதி அகல்யா" முதல் 1982 ஆம் ஆண்டில் "வெற்றி நமதே" வரை, மாடர்ன் தியேட்டர்ஸ் 117 படங்களைத் தயாரித்தது, அவற்றில் பல மைல்கல் ஹிட் அடித்த திரைப்படங்கள். மேலும் முதல் தமிழ் வண்ணத் திரைப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும்" (1956) உட்பட பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்களும் அடங்கும்.
(3 / 6)
சேலம், ஏற்காடு சாலையில், ஒன்பது ஏக்கர் நிலத்தில், டி.ஆர்.சுந்தரம், தனது லேண்ட்மார்க் ஸ்டுடியோவை கட்டினார். நிலையான அட்டவணைகள் மற்றும் வரவுசெலவுத் திட்டங்களுடன் திரைப்படத் தயாரிப்பில் வணிகம் போன்ற அணுகுமுறையை அவர் பின்பற்றினார். ஹாலிவுட் ஸ்டுடியோ போல இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸில் எம்.ஜி.ராமச்சந்திரன், மனோகர், ராமசாமி, தங்கவேலு, ஜெமினி கணேசன், கதாசிரியர் கருணாநிதி, பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியுள்ளனர்.
(4 / 6)
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெயலலிதா, வி.என்.ஜானகி, மனோரமா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மாடர்ன் தியேட்டஸின் ஆரம்ப கால வெற்றிகள் அலப்பெரியது.
(5 / 6)
தமிழின் முதல் ஸ்டண்ட் படமான மாயா மாயவன், 1938இல் மலையாளத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட பாலன் என்ற படம், முதல் சிங்கள படம், 1952இல் தமிழ்நாட்டில் இருந்து முதலில் எடுக்கப்பட்ட தி ஜங்கிள் என்ற ஆங்கில படம், 1940இல் தமிழில் எடுக்கப்பட்ட முதல் இரட்டை வேட படம் உத்தமபுத்திரன்,1956இல் தமிழில் முதலில் வெளியான அலிபாபவும் 40 திருடர்களும் போன்ற தமிழ் சினிமா துறை சார்பில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அறிமுக, முதல் நிகழ்வுகளுக்கு விதை போட்டவராக திகழ்ந்தார் டி.ஆர். சுந்தரம்
(6 / 6)
டி.ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான் எம்ஜிஆருக்கு முதல் ஹிட் கொடுத்த மந்திரி குமாரி படத்தை தயாரித்தது. தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இப்போது கோடம்பாக்கம் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் சேலத்தை மையமாக கொண்ட டி.ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் தான் இருந்து வந்தது. தற்போது மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் குடியிருப்பு பகுதியாக மாறினாலும் வரலாற்று சிறப்பு மிக்க அதன் நுழைவு வாயில் அப்படியே உள்ளது. அந்த இடத்தை தான் முதல்வர் ஸ்டாலின் கேட்டதாக, தற்போதைய அதன் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரம் தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்