உங்களுக்காக காத்திருப்பேன் என்று சொன்ன செல்வமணி.. 10 ஆண்டுகள் வெயிட்டிங்.. சுபத்தில் முடிந்த ரோஜா - செல்வமணி காதல் கதை
- சினிமாவில் மகிழ்ச்சியாக வாழும் முன்னணி காதல் ஜோடிகளில் ஒருவர், ரோஜா செல்வமணி. இயக்குநர் செல்வமணி நடிகை ரோஜாவை கரம்பிடித்த கதையைப் பார்ப்போம்.
- சினிமாவில் மகிழ்ச்சியாக வாழும் முன்னணி காதல் ஜோடிகளில் ஒருவர், ரோஜா செல்வமணி. இயக்குநர் செல்வமணி நடிகை ரோஜாவை கரம்பிடித்த கதையைப் பார்ப்போம்.
(1 / 6)
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகியப் படங்களை இயக்கிய பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குநர் செல்வமணி, நடிகை ரோஜாவை காதலித்து மணந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்களின் காதல் கதை எளிதானது அல்ல. செல்வமணி கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கிறார். அது பற்றிப் பார்ப்போம்.
(2 / 6)
'ஐ லவ் யூ' என்று சொல்வதற்கு முன்பே ரோஜாவை அவரது வீட்டில் சந்தித்தார், இயக்குநர் செல்வமணி. அவர்கள் குடும்பத்தில் நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்றார். இருப்பினும் செல்வமணி, ரோஜா ஆகியோர் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதல் பாதிக்கப்படும் என்று ஆரம்பத்தில் நினைத்தனர்.
(3 / 6)
காதலில் ஜெயிக்க முதலில் பெற்றோரின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த செல்வமணி, ரோஜாவின் பெற்றோரிடம் அனுமதி வாங்கினார். ரோஜா வீட்டில் செல்வமணி செய்த செயல்களுக்கு அவர்களும் சம்மதித்தனர். பிறகு ரோஜாவிடம் வந்து 'ஐ லவ் யூ’ என்று சொல்லி இருக்கிறார்.
(4 / 6)
நடிகை ரோஜாவின் பிறந்த நாளன்று, செல்வமணி தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது உச்ச நடிகையாக இருந்த ரோஜா, டாப் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்துக்கொண்டார்.
(5 / 6)
காதலைச் சொன்னபின் கூட, இயக்குநர் செல்வமணி நடிகை ரோஜாவிடம், 'நீங்க இப்ப பிஸியா இருக்கீங்க. உங்க ஆசை நிறைவேறும் வரைக்கும் நடிங்க. எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை. அதுவரை நான் காத்திருப்பேன்’ என தனது வருங்கால வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை செல்வமணி மதித்தார்.
(6 / 6)
செல்வமணி தனது காதலைப் பற்றி ரோஜாவின் பெற்றோரிடம் முதலில் சொல்லி சம்மதிக்க வைத்தார். ஆனால், சுமார் பத்து ஆண்டுகள் காத்திருந்தார். ஆம், ரோஜா - செல்வமணி காதலித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரோஜா-செல்வமணி தம்பதிக்கு, அனுஷ்மலிகா செல்வமணி, கிருஷ்ண லோகித் செல்வமணி ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மற்ற கேலரிக்கள்