Mayotte Cyclone Chido: சீர்குலைத்த சிடோ புயல்.. ஆயிரம் உயிரை குடித்த அரக்க சுழல்.. மயோட்டே தீவில் கோரம்!
- மயோட்டே என்பது மடகாஸ்கருக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் 320,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தீவு. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் முஸ்லிம்கள். புலம்பெயர்ந்த சோமாலியா, பிரான்சு மக்கள் 1 லட்சம் பேரும் அங்கு வசிக்கின்றனர்.
- மயோட்டே என்பது மடகாஸ்கருக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் 320,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தீவு. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் முஸ்லிம்கள். புலம்பெயர்ந்த சோமாலியா, பிரான்சு மக்கள் 1 லட்சம் பேரும் அங்கு வசிக்கின்றனர்.
(1 / 7)
ஆப்பிரிக்காவுக்கு அப்பால் உள்ள சிறிய பிரெஞ்சு தீவு பிரதேசம் தான் மயோட்டே. கடந்த சனிக்கிழமை அன்று சிடோ சூறாவளி மயோட்டே தீவை தாக்கியது
(2 / 7)
தலைநகரான மமூத்ஸோவில், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலா மரங்கள் முறிந்தன. வீடுகள், மேற்கூரைகள் பறந்தன. (AFP)
(3 / 7)
சூறாவளி பாதிப்பால், 70 சதவீத மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரெய்லியூ தெரிவித்துள்ளார்.(via REUTERS)
(4 / 7)
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, மருத்துவமனைகளில் 21 இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியது, 45 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.(AFP)
(5 / 7)
தீவுக்கூட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, தொலைத்தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டது, பெரும்பாலான ஆண்டெனாக்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டன. குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.(AP)
(6 / 7)
‘‘கற்பனை செய்ய முடியாத பேரழிவு இது, மீட்புப் படையினர் இன்னும் உடல்களைத் தேடி வருகின்றனர். மயோட்டின் ஒரே விமான நிலையமும் சேதம் அடைந்துவிட்டது. சில பகுதிகளுக்கு அவசர குழுக்களை அனுப்ப முடியாத சூழல் உள்ளது’’ என்று பிரெஞ்சு செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளார்.(via REUTERS)
மற்ற கேலரிக்கள்