தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu: ’உங்கள் ஜாதகத்தில் ராகு எங்கு உள்ளார் தெரியுமா? என்ன பலன்!’ இதோ முழு விவரம்!

Rahu: ’உங்கள் ஜாதகத்தில் ராகு எங்கு உள்ளார் தெரியுமா? என்ன பலன்!’ இதோ முழு விவரம்!

Apr 13, 2024 04:06 PM IST Kathiravan V
Apr 13, 2024 04:06 PM , IST

  • ”உங்கள் லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆம் இடங்களில் ராகு இருந்தால் அபரிவிதமான பலன்களை ராகு பகவான் கண்டிப்பாக கொடுப்பார்”

ராகு கேது ஆகிய கிரகங்கள் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார், எந்த கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார் என்பதை பொறுத்து, நன்மை தீமைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

(1 / 14)

உங்கள் லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆம் இடங்களில் ராகு இருந்தால் அபரிவிதமான பலன்களை ராகு பகவான் கண்டிப்பாக கொடுப்பார். 

(2 / 14)

ஜாதகத்தில் முதல் இடமான லக்னத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பானவராக இருப்பார். இவர்கள் தங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். இளமையில் வறுமை இருக்கும். இவர்களுக்கு போக இச்சை அதிகம் இருக்கும் என்பதால் நாளடைவில் புத்தர பாக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

(3 / 14)

லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு இருந்தால், குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். உணவு பிரியர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஒன்றுக்கும் பெண்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு. இவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

(4 / 14)

லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் ராகு உள்ளவர்கள் தைரியசாலிகளாக விளங்குவர், இவர்களுக்கு இசை மீது நாட்டம் அதிகமாக இருக்கும். உழைப்பது இவர்களுக்கு பிடிக்கும், இளைய சகோதர் உறவில் பிரச்னைகள் இருக்கும்.

(5 / 14)

லக்னத்திற்கு நான்காம் இடத்தில் ராகு இருந்தால், கல்வியில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இளமையில் ஏழ்மையை சந்திப்பார்கள், ஆனாலும் நடுத்தர வயதுக்கு பிறகு செல்வத்தை சேர்த்து சுகமாக வாழ்வார்கள்.

(6 / 14)

லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால், புத்தர தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஆனால் சிலருக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு வஞ்சக எண்ணங்கள் இயற்கையில் இருக்கும், பூர்வீக சொத்துக்களில் பிரச்னைகள் ஏற்படலாம். மனரீதியான பிரச்னைகளை சந்திக்கலாம்.

(7 / 14)

6ஆம் இடத்தில் ராகு உள்ளவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள்.  நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் விளங்குவர். கால்நடை மற்றும் மிருகங்களிடம் இவர்களுக்கு பயம் இருக்கும்.

(8 / 14)

7ஆம் இடத்தில் ராகு இருந்தால், ஒருக்கும் மேற்பட்ட வாழ்கை துணை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆணாக இருந்தால், பெண்களாலும், பெண்ணாக இருந்தாலும் ஆண்களாலும் பிரச்னைகள் ஏற்படாலம். அசையா சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

(9 / 14)

8ஆம் இடத்தில் ராகு இருந்தால் களத்தர தோஷத்தை உருவாக்கும். இவர்களுக்கு பயணம் செய்வதில் ஆர்வம் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். பண விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(10 / 14)

9ஆம் இடத்தில் ராகு இருந்தால் எல்லா போகங்களும் தேடி வரும். இவர்களுக்கு நிம்மதி சற்று குறைவாக இருக்கும். அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும். அரசியல்வாதிகள், பெரும் தலைவர்கள் உடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கும். 

(11 / 14)

10ஆம் இடத்தில் ராகு இருந்தால் பணம் கொட்டும். இவர்களின் எண்ண அலைகள் பணத்தின் மீது இருக்கும். உழைப்பின் மீது இவர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கும். இவர்கள் வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். இவர்களுக்கு மூடநம்பிக்கை சற்று அதிகம் இருக்கும். 

(12 / 14)

11ஆம் இடத்தில் ராகு இருந்தால், வாகன யோகம் இருக்கும். பகுத்தறிவு சிந்தனை இவர்களுக்கு உண்டு, லாட்டரி, ரேஸ், ஷேர் மார்க்கெட் துறைகளில் பணம் வரும். 

(13 / 14)

12ஆம் இடத்தில் ராகு இருந்தால், வாழ்கையில் போகத்தை நன்கு அனுபவிப்பார்கள். ஆனால் நிம்மதி இவர்களுக்கு குறையும். சொத்துக்களை இழக்க வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு மறைமுகமாக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

(14 / 14)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்