Best AI Apps: எடிட்டிங் முதல் ரைட்டிங் வரை.. உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் சிறந்த AI செயலிகள் இவைதான்
- செயற்கை நுண்ணறிவு (AI) அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது, அந்த வகையில் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் மிகவும் பிரபலமான சிறந்த 10 AI பயன்பாடுகளின் பட்டியல்களை பார்க்கலாம்.
- செயற்கை நுண்ணறிவு (AI) அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது, அந்த வகையில் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் மிகவும் பிரபலமான சிறந்த 10 AI பயன்பாடுகளின் பட்டியல்களை பார்க்கலாம்.
(1 / 11)
ஒரு கேள்விக்கு பதில் தேவைப்படும்போதும், மின்னஞ்சல் அல்லது கட்டுரையை எழுதுவதற்கும்அல்லது புகைப்படத்தில் திருத்தங்கள் செய்யவும் என அனைத்து வேலைகளும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியுடன் விரைவாகவும் எளிதாகவும் செய்யும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. சமீபத்திய தொழில்நுட்பத்தின் மூலம் பல விஷயங்களைச் செய்யக்கூடிய 10 சிறந்த AI பயன்பாடுகளின் பட்டியலை பார்க்கலாம்
(2 / 11)
ChatGPT: அமெரிக்க நிறுவனமான OpenAIஇன் ChatGPT கருவி மிகவும் சக்தி வாய்ந்த AI பயன்பாடுகளில் ஒன்றாக உள்ளது. இது அனைத்து வகையான கேள்விகளுக்கும் விரைவாக பதிலளிக்கவும், கட்டுரைகளை எழுதவும் உதவுகிறது. குரல் தொடர்பு மற்றும் நிகழ்நேர உரையாடல்கள் போன்ற அம்சங்களும் இந்த பயன்பாட்டில் கிடைக்கின்றன
(3 / 11)
கூகுள் ஜெமினி: கூகுளின் சக்திவாய்ந்த AI அடிப்படையிலான தனிப்பட்ட அசிஸ்டென்ட்டாக இது செயல்படுகிறது. இதன் மூலம், ஜிமெயிலில் வரும் மின்னஞ்சல்களை சுருக்கமாக கூறுவது அல்லது மின்னஞ்சல்களை எழுதுவது போன்ற பணிகளைச் செய்யலாம். இதன் நன்மைகள் பிற கூகுள் சேவைகள் மற்றும் பயன்பாடுகளிலும் காணப்படுகின்றன
(4 / 11)
மைக்ரோசாஃப்ட் கோபிலட்: இந்த மைக்ரோசாஃப்ட் கருவியில், OpenAI GPT-4o மற்றும் DALL-E 3 போன்ற மாதிரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல உற்பத்தித்திறன் விருப்பங்களை வழங்குகிறது. ஜெனரேட்டிவ் எடிட்டிங் தவிர, புகைப்படங்களையும் இதன் மூலம் உருவாக்கலாம்
(5 / 11)
Perplexity AI அசிஸ்டென்ட்: இந்த பயன்பாடு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வழிகாட்டப்பட்ட AI தேடல் அம்சத்தைக் கொண்டுள்ளது மற்றும் பொதுவான பேச்சு மொழியைப் புரிந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது
(6 / 11)
Otter.ai: இந்த AI கருவி உற்பத்தித்திறனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயன்பாட்டின் மூலம், மீட்டிங்குகளை ரெக்கார்டு செய்யலாம், டிரான்ஸ்க்ரைப் செய்வதுடன் சுருக்கமாகவும் கூறலாம். அதிக நோட்ஸ்களை எடுக்க வேண்டிய தேவையை குறைக்கிறது. நீண்ட நேர மீட்டிங் அமர்வுகளை சுருக்கமான முறையில் புரிந்து கொள்ள உதவுகிறது
(7 / 11)
Duolingo: நீங்கள் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்த AI மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் உதவியுடன் 40க்கும் மேற்பட்ட மொழிகளை தனிப்பயனாக்கப்பட்ட முறையில் கற்கும் விருப்பம் வழங்கப்படுகிறது. இதன் பயன்பாடு பயனாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குகிறது
(8 / 11)
FaceApp: சிறந்த எடிட்டிங்குக்கான ஒரு பிரபலமான பயன்பாடாக உளளது. நல்ல செல்ஃபிகளை இதன் மூலம் கிளிக் செய்யலாம். இந்த பயன்பாட்டில் பல பில்டர்கள் மற்றும் எபெக்ட்கள் உள்ளன. முக அம்சங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாலினங்களை மாற்றுதல் மற்றும் சிகை அலங்காரம் முன்னோட்டம் போன்றவையும் இதில் அடங்கும்
(9 / 11)
கிராமர்ளி கீபோர்டு: இந்த AI தானாகவே இலக்கணம் தொடர்பான தவறுகளை சரிசெய்கிறது. எழுத்துப்பிழை சரிபார்ப்பு, இலக்கண சரிபார்ப்பு மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற அனைத்தும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த பயன்பாட்டின் உதவியுடன், சிறந்த சொற்களஞ்சியத்தைத் தவிர, வாக்கியங்களை மீண்டும் எழுதுதல் மற்றும் தொனியை மாற்றுதல் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன
(10 / 11)
Lensa: Lensa AI ஒரு சக்திவாய்ந்த புகைப்பட எடிட்டிங் கருவியாக உள்ளது. இதன் உதவியுடன், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளின் தரத்தை மேம்படுத்த முடியும். பயனர்கள் போட்டோகளின் பின்னணியைச் செம்மைப்படுத்துவது முதல் சருமத்தை மென்மையாக்குவது மற்றும் ஆர்டிஸ்ட் எபெக்ட்களை பயன்படுத்துவது வரை உதவியைப் பெறலாம்
மற்ற கேலரிக்கள்