தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thalapathy Vijay Speech: ‘ எனக்கே பயமா இருக்கு..தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் வேணும் தம்பிகளா..’ - விஜய் அதிரடி!

Thalapathy Vijay Speech: ‘ எனக்கே பயமா இருக்கு..தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் வேணும் தம்பிகளா..’ - விஜய் அதிரடி!

Jun 28, 2024 02:15 PM IST Kalyani Pandiyan S
Jun 28, 2024 02:15 PM , IST

Thalapathy Vijay Speech: இங்கு நமக்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் தலைவர்கள் சொன்னது அரசியல் ரீதியாக மட்டுமில்லை, நீங்கள் செல்லும் இடத்திலும் தலைவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னேன். - விஜய் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், “ நடந்து முடிந்த பொது தேர்வில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்து. இந்த விழா சிறப்பாக நடக்க உதவிய ஆனந்திற்கும், ராஜேந்திரனுக்கும் மற்றும் த.வெ.க கட்சியின் தோழர்களுக்கு நன்றி. இரவு, பகல் பார்க்காமல் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். 

(1 / 7)

பாசிட்டிவ் எனர்ஜிஎதிர்காலத்தின் தமிழக மாணவ, மாணவிகளான உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருப்பவர்களைப் பார்க்கும் போது தானாக ஒன்று நடக்கும் என சொல்லுவார்கள் அல்லவா.. அது எனக்கு இன்று காலை முதல் நடக்கிறது. உங்க எல்லாரையும் பார்த்தவுடன் அது நடக்கிறது. இந்த மாதிரி விழாவில் இரண்டு நல்ல விஷயங்கள் சொல்வதைத் தாண்டி என்ன சொல்வது என தெரியவில்லை. நீங்க எல்லாரும் அடுத்த கட்டம் நோக்கி போகிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்தது என்ன செய்யப் போகிறோம் என தெரியும். அதில் சிறிய தோய்வு ஏற்படலாம்.எல்லா தொழிலும் நல்லது தான். ஆனால் 100% உழைப்பு போட்டால் யாராக இருந்தாலும் நிச்சயம் வெற்றி தான். அதில் இருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். 

(2 / 7)

நல்ல தலைவர்கள் தேவைஇங்கு நமக்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் தலைவர்கள் சொன்னது அரசியல் ரீதியாக மட்டுமில்லை, நீங்கள் செல்லும் இடத்திலும் தலைவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னேன்.அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா?வரும் காலத்தில் அரசியலும் கரியராக மாற வேண்டும் என்பது என் ஆசை. நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள்? நல்ல படிச்சவங்க தலைவராக வேண்டுமா? வேண்டாமா?  

(3 / 7)

பொய்யான பிரச்சாரங்கள்படிக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடுங்கள். நாளிதழ் படியுங்கள். எல்லாமே பாருங்கள். உண்மை எது பொய் எது என தெரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டாலே ஒரு சில அரசியல் கட்சி செய்யும் பொய்யான பிரச்சாரங்கள் நம்பாமல் இருக்கலாம். இது தெரிந்து கொண்டாலே ஒரு சிறந்த அரசியல் எதுவுமே இருக்க முடியாது. 

(4 / 7)

அடையாளத்தை இழக்க வேண்டாம்உங்களின் அடையாளத்தை இழக்க வேண்டாம். போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பெற்றோர், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்குமே அச்சமாக தான் இருக்கிறது. போதை பொருளை தடுக்க ஆளும் அரசு தவறியது என பேச நான் வரவில்லை. அதற்கான மேடை இதுவும் இல்லை. 

(5 / 7)

நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். 'Say No to temporary Pleasure and Say no to drugs' ” என்றார்.

(6 / 7)

மாணவர்களுடன் விஜய்

(7 / 7)

மாணவர்களுடன் விஜய்

மற்ற கேலரிக்கள்