அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!

அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!

Published May 12, 2025 04:38 PM IST Priyadarshini R
Published May 12, 2025 04:38 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துகலாமின் வாக்கியங்களை கூறினால் அவர்கள் உற்சாகமாவார்கள். அவை என்னவென்று பாருங்கள்.

கலாமின் வார்த்தைகள், ஞானத்தின் திறவுகோலாகும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒரு அறிவார்ந்த அறிவியல் அறிஞர் மட்டும் கிடையாது. அவருக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இவர் இளந்தலைமுறையினரின் சக்தியை அறிந்து வைத்திருந்தார். இவரின் வார்த்தைகள் குழந்தைகளை, மாணவர்களை எப்போதும் ஈர்பவையாகும். இவரின் கனவு காணுங்கள் என்ற வாசகம் பிரபலமானதும் ஆகும். மேலும் கடின உழைப்பு மற்றும் அடக்கமாக நடந்துகொள்வது என அனைத்தும் குழந்தைகளுக்கு தேவையானவை. இவை தவிர அப்துல் கலாம் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்.

(1 / 10)

வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை - வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை என்ற இவரின் வாசகம், இந்த உலகம் முழுவதும் நமது நண்பர்கள் என்பதைக் குறிக்கிறது. நாம் எப்போதும் சிறப்பானதை மட்டுமே இந்த உலகுக்கு கொடுக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது. இது குழந்தைகளை அவர்களை சுற்றியுள்ள உலகுடன் தொடர்புகொள்ளவும், நேர்மறை எண்ணங்களையும் விதைக்கிறது. இது விடாமுயற்சியை ஊக்கப்படுத்துகிறது.

(2 / 10)

நம் அனைவரின் திறமையும் ஒரே மாதிரியானது கிடையாது - நம் அனைவரின் திறமையும் ஒரே மாதிரியானது கிடையாது. ஆனால் நமக்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள சமமான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது குழந்தைகளுக்கு வெற்றி என்பது ஆரம்பம் முதலே நீங்கள் சிறப்பானவர்களாக இருப்பதால் கிடைப்பதல்ல, ஆனால் நீங்கள் வாய்ப்புக்களை பயன்படுத்தி கற்பது மற்றும் வளர்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது என்பதைக் குறிக்கிறது.

(3 / 10)

கனவு காணுங்கள் - கனவு காணுங்கள், அவை சிந்தனைகளாகின்றன, சிந்தனைகள் செயலாகிறது என்று கூறுகிறார். உங்கள் கனவுகளை நீங்கள் நம்பவேண்டுமெனில், நினைவில் கொள்ளுங்கள், எத்தனை பெரிய சாதனைகளும் சிறிய கனவில் இருந்து துவங்குகிறது.

(4 / 10)

வெற்றிக் கதைகளை மட்டும் படிக்காதீர்கள் - வெற்றிக் கதைகளை மட்டும் படிக்காதீர்கள், உங்களுக்கு அதில் இருந்து வெறும் கருத்து மட்டுமே கிடைக்கும். தோல்வி கதைகளையும் படியுங்கள். அதில் இருந்து நீங்கள் வெற்றிக்கான சில யோசனைகளைப் பெற முடியும். தவறுகளும், தோல்வியும், திடீர் வெற்றியைவிட அதிகம் கற்றுக்கொடுக்கின்றன.

(5 / 10)

அவற்றை உண்மையாக்க கனவு காணுங்கள் - உங்களின் கனவுகள் நிஜமாவதற்கு முன் நீங்கள் கனவு காண வேண்டும். இது குழந்தைகள், தங்களின் சிறப்பான எதிர்காலம் குறித்து கற்பனை செய்வதை நிறுத்தக் கூடாது என்பதைக் குறிக்கிறது. அதுதான் அதை சாத்தியமாக்கும் முதல் படி.

(6 / 10)

தோற்றாலும் துவண்டு விடாதீர்கள் - நீங்கள் தோற்றுப்போனாலும், துவண்டு போகாதீர்கள், ஏனெனில், தோல்வி என்பது, கற்றலின் முதல் படி, அது முடிவல்ல என்று கலாம் குறிப்பிடுகிறார். சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமான வாசகம் ஆகும்.

(7 / 10)

சிறப்பு என்பது தொடர்ச்சியின் விளைவு - நீங்கள் மிகவும் சிறப்பாக ஒரு காரியத்தை செய்வது என்பது எதிர்பாராதவிதமாக நடந்துவிடாது. அது தொடர்ந்து நீங்கள் முயல்வதன் விளைவாகும். இது குழந்தைகளை தொடர்ந்து செயல்படவும், பொறுமையை கடைபிடிக்கவும் உதவும். நீங்கள் சிறப்பான காரியங்களை படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

(8 / 10)

சிந்தனைதான் உங்களின் முதலீடு - சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் உங்களின் முதல் சொத்தாக இருக்கவேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த வெற்றி, தோல்விகளை சந்தித்திருந்தாலும் பிரச்னையில்லை. இந்த வாசகம் குழந்தைகளுக்கு, அவர்களின் சிந்தனை திறனை விட்டுவிடக்கூடாது என்று அவர்களுக்கு எடுத்துக்கூறுகிறது. அவர்களின் சிந்தனைகள் மற்றும் முடிவெடுக்கும் திறனில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும். இது சிறந்த தலைவர்களின் முக்கிய பண்பாகும்.

(9 / 10)

சிறந்த கனவுகளை காண்பவர்களின் சிறந்த கனவுகள் - சிறந்த கனவுகளைக் காண்பவர்களின் சிறந்த கனவுகள் நிறைவேறும். இது குழந்தைகளுக்கு, பெருங்கனவுகள், அவர்களின் கற்பனைகளை கடந்து செல்லும் என்பதைக் குறிக்கும்.

(10 / 10)

பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்