ஜெய்பீம் படத்திற்கு கிடைக்காத தேசிய விருது? எப்படி புஷ்பாவிற்கு கிடைத்தது? தெலங்கானா அமைச்சர் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜெய்பீம் படத்திற்கு கிடைக்காத தேசிய விருது? எப்படி புஷ்பாவிற்கு கிடைத்தது? தெலங்கானா அமைச்சர் கேள்வி!

ஜெய்பீம் படத்திற்கு கிடைக்காத தேசிய விருது? எப்படி புஷ்பாவிற்கு கிடைத்தது? தெலங்கானா அமைச்சர் கேள்வி!

Dec 24, 2024 10:31 AM IST Suguna Devi P
Dec 24, 2024 10:31 AM , IST

  • தெலங்கானா அமைச்சர் சீதாக்கா புஷ்பா படத்திற்கு தேசிய விருது அளித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கமால் பாரபட்சம் கட்டப்படுவதாகவும் கூறியுள்ளார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.  

தெலங்கானா மாநிலத்தின் பஞ்சயாத்து மற்றும் ஊரக வளர்ச்சி துரை அமைச்சராக இருக்கும் சீதாக்கா புஷ்பா படத்தின் தேசிய விருது குறித்து கடுமையாக கருத்து தெரிவித்ததையடுத்து விவாதம் எழுந்துள்ளது . விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ஜெய் பீமுடன் ஒப்பிடுகையில் , சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை மகிமைப்படுத்தும் திரைப்படங்களுக்கு எதிராக சமூகப் பொருத்தமான கருப்பொருள்களை சித்தரிக்கும் திரைப்படங்களை அங்கீகரிப்பதற்கான காரணத்தை அவர் கேள்வி எழுப்பினார்.

(1 / 6)

டிசம்பர் 5 ஆம் தேதி உலக அளவில் பல திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரூ. 1000 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் விமர்சகர்களின் மனதை விரும்ப வைக்க வில்லை. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா 1 தி ரைஸ் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசை என அல்லு அர்ஜூன், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய இருவருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.  

(2 / 6)

இப்படத்தின் ப்ரைம் ஷோவிற்கு ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்கு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜூன் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ரேவதி என்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். பின் விடுவீக்கப்பட்டார். 

(3 / 6)

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப் பேரவையில் அல்லு அர்ஜூன் குறித்து தான் உரையாடினார். மேலும் அவரைக் காண சென்ற சினிமா பிரபலங்களையும் விமரசித்தார். மேலும் நேற்று தெலங்கானா ஏசிபி காவல் அதிகாரியும் புஷ்பா 2 படம் பார்ப்பதற்கு பதிலாக பா. ரஞ்சித் இயக்கிய படங்களை பாருங்கள் எனவும் கூறி இருந்தார். இவ்வாறு புஷ்பா 2 தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் கூடுதலாக ஒன்று இணைந்துள்ளது. 

(4 / 6)

புஷ்பா 2 சர்ச்சை குறித்து அமைச்சர் சீதக்க பரபரப்பான கருத்து தெரிவித்தார். ஜெய் பீம் போன்ற மெசேஜ் ஓரியண்டட் படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றார். இதுபோன்ற படங்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் கிடையாது. ஆனால் ஒரு கடத்தல்காரன் போலீஸ்காரரின் ஆடைகளை அவிழ்த்து எழுந்து நின்று போலீஸ் ஸ்டேஷன் வாங்கிய படங்களுக்கு மத்திய அரசு ஏன் விருது கொடுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

(5 / 6)

கையில் குழந்தையுடன் ஒரு ஏழைப் பெண்ணின் உரிமைக்காக போராடிய ஜெய் பீமுக்கு விருது கிடைக்கவில்லை. சினிமாவை மதிக்கிறோம். ஆனால் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வழக்கறிஞர் எப்படி ஜீரோவாகவும், கடத்தல் காரன் ஹீரோவாக மாற முடியும்?" என்று சீதக்கா கேட்டார். புஷ்பா 2 திரையரங்கு மற்றும் சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்