“எப்பவுமே நான் தான் கிங்கு”.. உலக கோப்பை நாயகன்.. இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ் மைல்கல் சாதனைகள்
- உலகமே திரும்பி பார்க்கும் விதமாக இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை பெற்ற கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் பல்வேறு சாதனை வெற்றிக்கு தனது அசாத்திய ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் பங்களிப்பு செய்தவர் கபில் தேவ்
- உலகமே திரும்பி பார்க்கும் விதமாக இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை பெற்ற கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் பல்வேறு சாதனை வெற்றிக்கு தனது அசாத்திய ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் பங்களிப்பு செய்தவர் கபில் தேவ்
(1 / 6)
உலகக் கோப்பை நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கபில் தேவ் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல் சாதனைகளின் மன்னனாகவும் இருந்து வரும் கபில் தேவ் நிகழ்த்தியிருக்கும் தனித்துவ சாதனைகளைகள் பற்றி பார்க்கலாம்
(2 / 6)
1970களின் காலகட்டம் வரை ஐந்துநாள் நாள் போட்டியாக விளையாடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சுருக்கம் பெற்று, ஒரு நாள் கிரிக்கெட் பிறந்தது. ஒரே நாளில் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யும் ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக முதல் சதம் அடித்தவர் என்ற பெருமை கபில் தேவ் வசமே உள்ளது. 1983 உலகக் கோப்பை போட்டியின்போது கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் இதை செய்தார்
(3 / 6)
இந்த போட்டியில் மற்றொரு சாதனையும் நிகழ்த்தினார். 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கபில் தேவ், தனது அதிரடியால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்த கபில் தேவ் கடைசி வரை அவுட்டாமல் இருந்தார். இந்த ஸ்கோர் தான் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கோப்பை போட்டிகளில் பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது
(4 / 6)
கபில் தேவ் அடித்த சதத்தில் மற்றொரு சாதனையும் அடங்கியுள்ளது. 72 பந்துகளில் சதமடித்த அவர், உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்த பேட்ஸ்மேனாகவும் மாறினார்
(5 / 6)
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கில் தான் கில்லி என்பதை பலமுறை நிருபித்துள்ளார் கபில் தேவ். அதற்கு சாம்பிளாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை என்ற மைல்கல்லை எட்டிய முதல் பவுலர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்
மற்ற கேலரிக்கள்