HBD Rahul Dravid: 11 ஆண்டு கனவு..ஐசிசி கோப்பையை மீட்டெடுத்தவர்.. இளம் திறமைகளை வடித்து தந்த இந்திய கிரிக்கெட் சிற்பி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hbd Rahul Dravid: 11 ஆண்டு கனவு..ஐசிசி கோப்பையை மீட்டெடுத்தவர்.. இளம் திறமைகளை வடித்து தந்த இந்திய கிரிக்கெட் சிற்பி

HBD Rahul Dravid: 11 ஆண்டு கனவு..ஐசிசி கோப்பையை மீட்டெடுத்தவர்.. இளம் திறமைகளை வடித்து தந்த இந்திய கிரிக்கெட் சிற்பி

Jan 11, 2025 06:20 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 11, 2025 06:20 AM , IST

  • Rahul Dravid Birthday: இந்திய கிரிக்கெட்டில் 1996 முதல் 2011 வரை வீரராகவும், 2021 முதல் 2024 வரை பயிற்சியாளராகவும் இருந்தவர் ராகுல் டிராவிட். டி20 உலகக் கோப்பை, யு 19 உலகக் கோப்பை வெற்றியாளராகவும் உள்ளார். டிராவிட்டின் 52வது பிறந்தநாளான இன்று பயிற்சியாளராக அவர் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கலாம்

இந்திய கிரிக்கெட்டில் ஒரு வீரராக எண்ணற்ற சாதனைகளை புரிந்திருந்தாலும் சில மோசமான தோல்விகளாலும், போட்டிகளாலும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர் ராகுல் டிராவிட். வீரராக கைமீறி போன வெற்றிகளை இந்திய அணியின் பயிற்சியாளராக மாறி தன் வசப்படுத்தியவர் ராகுல் டிராவிட்

(1 / 8)

2012இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சில காலம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக இருந்த ராகுல் டிராவிட் 2016 முதல்  2019 இந்திய யு19 பயிற்சியாளராக செயல்பட்டார்

(2 / 8)

இவரது பயிற்சி காலகட்டத்தில் 2016 யு19 உலகக் கோப்பையில் ரன்னர் அப் ஆன இந்திய யு19 அணி,, 2018ஆம் ஆண்டில் யு19 கோப்பையை வென்று சாதனை புரிந்தது 

(3 / 8)

2019இல் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியிமிக்கப்பட்ட டிராவிட், 2021இல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட தொடங்கினார்

(4 / 8)

ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலத்தில் இந்தியா 56 ஒருநாள் போட்டிகளில் 41 வெற்றியையும், 68 டி20 போட்டிகளில் 48 வெற்றியும் பெற்றது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எட்டு போட்டிகளில் 5இல் வெற்றியை பதிவு செய்தது

(5 / 8)

இந்தியாவின் ஐசிசி கோப்பை வறட்சியையும், மீண்டும் உலகக் கோப்பை என்ற கனவையும் நிறைவேற்றியது ராகுல் டிராவிட் தான். கடந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பரிக்காவை வீழத்தி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா, 11 ஆண்டுகள் ஐசிசி கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ள வைத்தது 

(6 / 8)

2023ஆம் ஆண்டில் ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் அதே ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்து செல்ல காரணமாக திகழ்ந்தார். அத்துடன் வெள்ளை பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வகை போட்டிகளிலும் இந்திய அணியை நம்பர் 1 இடத்துக்கு அழைத்து சென்றார்

(7 / 8)

டிராவிட்டின் பயிற்சி காலத்தில் இந்தியா விளையாடிய 144 சர்வதேச போட்டிகளில், இந்திய அணி 103 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த நூற்றாண்டின் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார். அந்த வகையில் வீரராக நிகழ்த்திய சாதனைகளுக்கு இணையாக களத்துக்கு வெளியே பல இளம் வீரர்களை செதுக்கிய சிற்பியாகவும் திகழ்கிறார்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்