John Wright: கோபக்கார Coach..! வீரராக பல சாதனைகள் - இந்திய அணியை புதிய உயரங்களை தொட வைத்த ஜான் ரைட்
- இந்தியா கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர், தான் விளையாடிய நியூசிலாந்து அணிக்காக முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை கடந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என ஜாம்பவான் வீரராகவும், சிறந்த பயிற்சியாளராகவும் இருந்துவர் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான் ரைட்க்கு இன்று பிறந்தநாள்
- இந்தியா கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர், தான் விளையாடிய நியூசிலாந்து அணிக்காக முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை கடந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என ஜாம்பவான் வீரராகவும், சிறந்த பயிற்சியாளராகவும் இருந்துவர் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான் ரைட்க்கு இன்று பிறந்தநாள்
(1 / 5)
உலக அரங்கில் இந்தியா கிரிக்கெட் அணி மீது பயத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு பயிற்சியாளர் ஜான் ரைட் பயிற்சியாளர், கேப்டன் செளரவ் கங்குலி கேப்டன் என்கிற இந்த காம்போவுக்கு உள்ளது. இந்த கூட்டணி அயலநாட்டில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்ததுடன், நாட்வெஸ்ட் கோப்பை சாம்பியன், 2002 சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் இறுதிபோட்டி வரை அழைத்து சென்றது
(2 / 5)
கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி பல புதிய உயரங்களை எட்டியது. இதற்கு காரணமாக பின்னாடி இருந்து செயல்பட்டவர் ஜான் ரைட். இவர் இந்திய அணிக்கு 2000 முதல் 2005 காலகட்டம் வரை பயிற்சியாளராக இருந்தார்
(3 / 5)
களத்தில் பெரிதாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாத ஜான் ரைட் மிகப் பெரிய கோபக்காரர். வீரேந்தர் சேவாக். திறமையை கண்டறிந்து அவரது ஆட்டத்தை மெருகேற்றியதில் கங்குலி - ஜான் ரைட் பங்கு அளப்பறியது. நாட்வெஸ்ட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விரைவாக அடித்து ஆட முயன்று அவுட்டானார். பின்னர் "டிரெஸிங் ரூமில் இருந்தபோது சேவாக் கழுத்தை பிடித்து ப்ரீஸரில் நுழைத்த ரைட், இனிமேல் இந்த ஷாட் ஆடினால் நீ இந்தியாவுக்கு செல்ல நேரிடும்" என்று வார்னிங் செய்துள்ளார். இதைப்பற்றி கங்குலி பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்திருந்தார்
(4 / 5)
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஜான் ரைட், அந்த அணிக்காக முதல் முறையாக 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். மொத்தம் 82 டெஸ்ட் போட்டிகளில் 5,334 ரன்கள் எடுத்திருக்கும் ரைட் 12 சதங்களும், 23 அரைசதங்களும் அடித்துள்ளார்
மற்ற கேலரிக்கள்