மகத்தான மார்கழி மாதம்! இதெல்லாம் செய்யக் கூடாதாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகத்தான மார்கழி மாதம்! இதெல்லாம் செய்யக் கூடாதாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்!

மகத்தான மார்கழி மாதம்! இதெல்லாம் செய்யக் கூடாதாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்!

Dec 15, 2024 05:37 PM IST Suguna Devi P
Dec 15, 2024 05:37 PM , IST

  • மார்கழி மாதம் என்றாலே கடுமையான குளிர் காலம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதனையும் தாண்டி மார்கழி மாதத்திற்கு பல தெய்வீக சிறப்புகள் உண்டு. அவற்றை இங்கு தெளிவாக பார்ப்போம்.  

ஆண்டின் டிசம்பர் 16 ஆம் தேதி அன்று தான் எப்பொழுதும் மார்கழி மாதம் பிறக்கிறது. மார்கழி என்றால் தெய்வத்திற்கு உகந்த மாதம் என்று பொருள். இந்துக்கள் இந்த மாதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் செய்யக் கூடாது என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் முழுவதும் தெய்வத்தை வணங்கி வந்தால் குடும்பத்தில் இன்பம் தழைக்கும் என நம்பப்படுகிறது. 

(1 / 6)

இந்த மகத்தான மார்கழி மாதத்தில் தான் ஆண்டாள் திருமாலை திருமணம் செய்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, எனவே இளம் பெண்கள் இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் விடியல் பொழுதில் எழுந்து நீராடி பெருமாளை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார் என நம்பப்படுகிறது. 

(2 / 6)

இந்த மகத்தான மார்கழி மாதத்தில் தான் ஆண்டாள் திருமாலை திருமணம் செய்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, எனவே இளம் பெண்கள் இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் விடியல் பொழுதில் எழுந்து நீராடி பெருமாளை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார் என நம்பப்படுகிறது. (Wikipedia)

தமிழ் மாதத்தில் ஒன்பதாது மாதமாக வரும் மார்கழி மாதத்தில் தான் அனைத்து நாட்களிலும் வீட்டின் முன் வித விதமான கோலங்கள் போடுவது வழக்கம். குறிப்பாக இந்த மாதம் முழுவதும் கோலம் போட்டு அடுத்ததாக வரும் தை மாதத்திலும் கோலம் போடுவார்கள்.  

(3 / 6)

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி மிக அண்மையில் இருப்பதால் சூரிய கதிர்கள் தொடமுடியாத கோணத்தில் இருக்கிறோம். எனவே வெப்பமின்றி குளிர்ச்சியாக இப்போது இருக்கிறது.

(4 / 6)

சூரியனின் இடம் மாறுவதால் 12 ராசிகளின் பலன்களும் மாறுபடுகின்றன. மேலும் பலருக்கு ஏற்றம் கிடைக்கிறது. அனைத்து ராசிக்காரர்களும் வைணவ கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தால் அவர்களின் எதிர்வினைகள் அனைத்தும் குறைந்து நன்மை பெருகும் என நமபப்படுகிறது. தமிழ்  மாதங்களில் அற்புதமான மாதமாகவும் இது கருதப்படுகிறது. 

(5 / 6)

மகாபாரத யுத்தமும் இந்த மார்கழி மாதத்தில் தான் நடந்தது என புராணங்கள் தெரிவிக்கிறது. கிருஷ்ணன் அர்ஜுனணை பார்த்து நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளாராம். மேலும் வருடம் முழுவயதும் கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் மார்கழியில் சென்றால் ஆண்டு முழுவது சென்ற பலன்கள் கிடைக்குமாம்.  

(6 / 6)

மற்ற கேலரிக்கள்