தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kumbam: ‘துன்பங்களில் இருந்து விடுதலை!’ கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்!

Kumbam: ‘துன்பங்களில் இருந்து விடுதலை!’ கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்!

Apr 08, 2024 07:26 PM IST Kathiravan V
Apr 08, 2024 07:26 PM , IST

  • ”கும்ப ராசிக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், இதயநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நோய்களில் இருந்து விடுபடலாம்”

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசியில் பிறக்கபோகும் குரோதி தமிழ் புத்தாண்டு மனிதனுக்கு சகல சௌபாக்கியங்களை தர வல்லது.  இந்த ஆண்டின் ராஜா செவ்வாய் பகவான், மந்திரி சனிஸ்வர பகவான், இந்த ஆண்டு முழுவதும் முருக பெருமானின் பேரருள் நிலைத்து இருக்கும். 

(1 / 7)

ஆண்டின் தொடக்கத்திலேயே கும்ப ராசியில் ஜென்மசனி கோச்சாரத்தில் உள்ளார். சித்தரை மாதத்தில் குரு பகவான் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

(2 / 7)

அதன் பிறகு பங்குனி மாதத்தில் சனீஸ்வரர் மீன ராசிக்கு செல்கிறார். ராகு மீனத்திலும், கன்னியில் கேதுவும் உள்ளனர். சித்திரையில் சூரியன் மேஷம் ராசிக்கு வரும் போது கும்ப ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

(3 / 7)

கும்ப ராசிக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், இதயநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நோய்களில் இருந்து விடுபடலாம்.

(4 / 7)

ஜென்மத்தில் உள்ள சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியை பார்க்கிறார். இதனால் முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். 7ஆம் பார்வையாக திருமணத்தடையை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய உறவுகளில் மந்த நிலை உண்டாகும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.

(5 / 7)

குரு பகவானை பொறுத்தவரை 4ஆம் இடமான ரிஷபராசிக்கு செல்வதால், அந்த வீட்டில் ஏதெனும் சுப கிரகங்கள் இருந்தால் நன்மைகள் உண்டாகும். குருவின் பார்வை 8ஆம் வீட்டில் விழுவதால் கடன்கள், முயற்சிகளில் இருந்த தடங்கல்கள், உடல்நல குறைபாடு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

(6 / 7)

ராசிக்கு 2ஆம் இடத்தில் உள்ள ராகு ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலை மேற்கொள்ள தூண்டுவார். புதிய தொழிலை மேற்கொள்ளும் போது நன்கு யோசித்து செய்தால் வெற்றி உண்டாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்