தமிழகத்தின் 60 ஆண்டுகால சோகம்.. திரும்ப திரும்ப வரும் டிசம்பரும் திரும்பி வராத நகரமும்.. தனுஷ்கோடி தகர்ந்த கதை!
- இந்தியா இலங்கை இடையே போர்ட் மெயில் என்ற இந்தோ சிலோன் ரயில் சேவை ஓடியது. இந்தியா - இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கினர்.
- இந்தியா இலங்கை இடையே போர்ட் மெயில் என்ற இந்தோ சிலோன் ரயில் சேவை ஓடியது. இந்தியா - இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கினர்.
(1 / 6)
இராமேஸ்வரத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலும் இந்தியப்பெருங்கடலும் இணையும் பகுதியில் இருந்த துறைமுக நகரம் தனுஷ்கோடி . பள்ளிக்கூடம், தபால் தந்தி அலுவலகம், சந்தை, மருத்துவமனை, கோயில் மசூதி, தேவாலையம், காவல்நிலையம், இரயில் நிலையம், துறைமுகம் இவற்றை சுற்றி அமைந்திருந்த வணிக நகரம் தான் தனுஷ்கோடி.
(2 / 6)
சுமார் 3000 மீனவ மக்கள் வாழ்ந்த பகுதி. இந்தியா இலங்கை இடையே போர்ட் மெயில் என்ற இந்தோ சிலோன் ரயில் சேவை ஓடியது. இந்தியா - இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கினர். இதற்காக பாம்பன் ரயில் பாலமும், தனுஷ்கோடி, தலை மன்னார் துறைமுகங்களும் அமைக்கப்பட்டன.
(3 / 6)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பயணம், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் பயணம், மீண்டும் தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு ரயில் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு எடுத்தால் போதும். இப்படி இந்தியாவையும் இலங்கையையும் வெறும் 80 ரூபாய் செலவில் இணைக்க வழி செய்யப்பட்டிருந்தது. கடல் உண்டு மீன் உண்டு தங்கள் வேலை உண்டு என்று தங்கள் வாழ்க்கையை வடிவமைத்திருந்தனர் அந்த மக்கள்.
(4 / 6)
அப்போது தான் யாரும் எதிர்பாராத நிலையில் 1964ம் தேதி டிசம்பர் 15ந் தேதி அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அப்போதே மழை தொடங்கிய நிலையில் அடுத்த 4 நாட்களில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே தொலை தொடர்புகள் பலத்த மழை காற்றால் துண்டிக்கப்பட்டதால் புயல் வீசும்நேரம், திசை, தீவிரம் என எந்த தகவலும் அந்த அப்பாவி மக்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை.
(5 / 6)
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவு முதல் 24ம் தேதி வரை கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கியது. மழையும் வேகம் எடுத்தது. 23-ந் தேதி அன்று இரவு 8 மணியில் இருந்து 24-ந் தேதி அதிகாலைக்குள் புயல் கோர தாண்டவமாடியது. அப்போது விபரீதம் தெரியாமல் வந்த பாம்பன் தனுஷ்கோடி பயணிகள் ரயிலை நீர் உள்வாங்கியது அதில் பயணித்த 115 பேர் உயிரிழந்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் குஜராத்திலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள். இந்த புயலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் உயிரிழந்தனர்.
(6 / 6)
அந்த கோரத்திற்கு பின்னர் தனுஷ்கோடி வாழ தகுதியற்ற நகரம் என அறிவித்தது தமிழக அரசு. இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரழிவு என்றது. ஐ.நா சபை ஆசியாவில் நிகழ்ந்த 20ம் நூற்றாண்டின் பேரழிவு என்று வர்ணித்தது. அந்தக் கோரப்புயலின் தாக்கத்திலிருந்து இன்றுவரை தனுஷ்கோடி மீள முடியாமல் தவிக்கிறது என்பதே வரலாறு.
மற்ற கேலரிக்கள்