Brain-Eating Amoeba: கேரளாவை அச்சுறுத்தும் மூளையை திண்ணும் அமீபா! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
- Brain-Eating Amoeba: அதில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் / மாசுபட்ட / அழுக்கு நீரில் குளிக்க பயன்படுத்த வேண்டாம். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது
- Brain-Eating Amoeba: அதில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் / மாசுபட்ட / அழுக்கு நீரில் குளிக்க பயன்படுத்த வேண்டாம். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது
(1 / 7)
மூளையை திண்ணும் அமீபா நோய்க்கு கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
(2 / 7)
கேரளாவில் இந்த நோய்க்கு 14 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்து உள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(3 / 7)
மூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெக்லெரியா ஃபோவ்லெரி, ஒரு அரிதான ஆனால் ஆபத்தான நுண்ணுயிரி ஆகும். இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (பிஏஎம்) எனப்படும் மூளையின் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும். அமீபா மூளை திசுக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸின் நோயின் அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் 15 நாட்களுக்குப் பிறகு வெளிப்படும்.
(5 / 7)
அறிகுறிகள் விரைவாக முன்னேறும். ஆரம்ப கட்டங்களில், பிஏஎம் நோயறிதல் கடினமாக இருக்கும், ஏனெனில் அறிகுறிகள் பாக்டீரியா அல்லது வைரஸ் மூளைக்காய்ச்சலுடன் நெருக்கமாக ஒத்திருக்கின்றன.
(6 / 7)
பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் / மாசுபட்ட / அழுக்கு நீரில் குளிக்க பயன்படுத்த வேண்டாம். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது வழிகாட்டு நெறிமுறையில் அறிவித்து உள்ளது.
(7 / 7)
பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2 பி.பி.எம்.க்கு மேல் குளோரின் அளவை உயிரினமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற கேலரிக்கள்