ITI admission: இந்த படிப்பில் சேர்ந்த மாசம் 750 ரூபாய் உதவித் தொகை! எல்லாமே இலவசம்! அதிரவிடும் தமிழக அரசு! இதோ விவரம்!
ITI admission: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes) உள்ளிட்டவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
(1 / 6)
தமிழ்நாட்டில் ஐடிஐ படிப்பில் சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
(2 / 6)
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி
நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
(3 / 6)
2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள
கலந்தாய்வு 28.06.2024 உடன் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி 8-
ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால
அவகாசம் 01.07.2024 முதல் 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது.
(4 / 6)
தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 16.07.2024 முதல் 31.7.2024 வரை மேலும் கால
அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
(5 / 6)
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி
நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு
செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
(6 / 6)
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.
கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா
மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா
பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
மற்ற கேலரிக்கள்