ஹீரோயினாக களம் இறங்கும் பிக்பாஸ் ஜனனி! ஹீரோ யார் தெரியுமா? தமிழ் தெலுங்கில் வெளியான போஸ்டர்!
- பிக்பாஸ் பிரபலங்கள் திரைத்துறையிலும் தங்களது தடத்தை பதித்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இல் பங்கேற்ற போட்டியாளரான ஜனனி இப்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
- பிக்பாஸ் பிரபலங்கள் திரைத்துறையிலும் தங்களது தடத்தை பதித்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இல் பங்கேற்ற போட்டியாளரான ஜனனி இப்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
(1 / 6)
இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி தமிழ் தொலைக்காட்சிகளின் டாப் நிகழ்ச்சியான பிக்பாஸின் 6 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதன் மூலமே தமிழக ரசிகர்களுக்கு ஜனனி அறிமுகமாக்கினார். போட்டியில் சரியாக விளையாடா விட்டாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் சிறந்த இடத்தைப் பிடித்தார்.
(2 / 6)
பிக்பாஸ் வீட்டில் இவருடன் மகேஷ்வரி நெருங்கிய தோழியாக இருந்து வந்தார். கொஞ்சும் இலங்கை தமிழால் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டார். ஆனால் சில போட்டிகளில் சரியாக விளையாடமால் மொக்கை வாங்கினார். பல விமர்சனத்திற்கும் உல்லானார்.
(3 / 6)
பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ஆனால் இவருக்கும் பல ரசிகர்கள் உருவாகி இருந்தனர். குழந்தை தனம் அதிகம் இருந்த ஜனனி தமிழி சினிமாவில் ஒரு வலம் வருவார் என எதிறப்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தார்.
(4 / 6)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். வந்தது சில நிமிட காட்சியாக இருந்த போதிலும் அழுத்தமான முக்கியமான ரோல் கிடைத்தது.
(5 / 6)
இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோயின் ஆக நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் உயிரே படத்தில் இவருக்கு ஜோடியாக டிஜே அருணாச்சலம் நடித்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்