தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  T20 Worldcup: டி20 உலகக் கோப்பை அரையிறுதி தேதி, நேரம்?-சூப்பர் 8 சுற்று வரை வந்து சோகத்துடன் வெளியேறி அணி லிஸ்ட் இதோ

T20 Worldcup: டி20 உலகக் கோப்பை அரையிறுதி தேதி, நேரம்?-சூப்பர் 8 சுற்று வரை வந்து சோகத்துடன் வெளியேறி அணி லிஸ்ட் இதோ

Jun 25, 2024 11:27 AM IST Manigandan K T
Jun 25, 2024 11:27 AM , IST

  • T20 Worldcup semi final date: டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் சூப்பர் 8 சுற்று வரை முன்னேறி அரையிறுதிக்குத் தகுதி பெறாத அணிகள் என்னென்ன? அரையிறுதி போட்டி நடைபெறும் தேதி என்ன? என்பது குறித்து இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் ஓர் ஆட்டத்தில் கூட தோல்வி அடையாமல் கம்பீரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டது. இங்கிலாந்து அணியுடன் வரும் 27ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அரையிறுதியில் மோதுகிறது இந்தியா. (ANI Photo)

(1 / 7)

இந்திய கிரிக்கெட் ஓர் ஆட்டத்தில் கூட தோல்வி அடையாமல் கம்பீரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டது. இங்கிலாந்து அணியுடன் வரும் 27ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அரையிறுதியில் மோதுகிறது இந்தியா. (ANI Photo)(BCCI- X)

இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவையும், வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவுடன் மட்டும் சூப்பர் 8 இல் ஓர் ஆட்டத்தில் தோற்றது பட்லர் தலைமையிலான இங்கிலாந்து. அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்கிறது (Photo by Chandan Khanna / AFP)

(2 / 7)

இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவையும், வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவுடன் மட்டும் சூப்பர் 8 இல் ஓர் ஆட்டத்தில் தோற்றது பட்லர் தலைமையிலான இங்கிலாந்து. அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்கிறது (Photo by Chandan Khanna / AFP)(AFP)

இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று தோல்வியே சந்திக்காமல் வீறு நடை போட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா. சூப்பர் 8 சுற்று மேட்ச்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது. குட்டி டீமாக இருந்தாலும் வீரத்துடன் அதகளம் செய்து வரும் ஆப்கனை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அரையிறுதியில் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)

(3 / 7)

இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று தோல்வியே சந்திக்காமல் வீறு நடை போட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா. சூப்பர் 8 சுற்று மேட்ச்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது. குட்டி டீமாக இருந்தாலும் வீரத்துடன் அதகளம் செய்து வரும் ஆப்கனை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அரையிறுதியில் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)(AFP)

லீக் மேட்ச்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் சரணடைந்தது. அமெரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் மட்டுமே சூப்பர் 8இல் வெற்றி பெற்றது. எனினும், பிற அணிகளின் சிறப்பான செயல்பாட்டால் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ். இந்தப் போட்டியை அமெரிக்காவுடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)

(4 / 7)

லீக் மேட்ச்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் சரணடைந்தது. அமெரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் மட்டுமே சூப்பர் 8இல் வெற்றி பெற்றது. எனினும், பிற அணிகளின் சிறப்பான செயல்பாட்டால் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ். இந்தப் போட்டியை அமெரிக்காவுடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)(AFP)

டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸுடன் இணைந்து நடத்திவரும் அமெரிக்கா முதல் மேட்ச்சிலேயே ஜெயித்து வெற்றித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாத அணியாக இருந்தபோதிலும் சிறப்பாக சண்டை செய்தது என்றே சொல்லலாம். அந்த அணி சூப்பர் 8ல் அடியெடுத்து வைத்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றில் ஜாம்பவான் அணிகளாக இஙங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவிடம் மண்டியிட்டது. (Photo by Chandan Khanna / AFP)

(5 / 7)

டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸுடன் இணைந்து நடத்திவரும் அமெரிக்கா முதல் மேட்ச்சிலேயே ஜெயித்து வெற்றித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாத அணியாக இருந்தபோதிலும் சிறப்பாக சண்டை செய்தது என்றே சொல்லலாம். அந்த அணி சூப்பர் 8ல் அடியெடுத்து வைத்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றில் ஜாம்பவான் அணிகளாக இஙங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவிடம் மண்டியிட்டது. (Photo by Chandan Khanna / AFP)(AFP)

இந்தப் போட்டியில் பல ஆச்சரியங்களை அள்ளிக் கொடுத்த அணி ஆப்கன். அதிகம் பலமில்லாத அணியாக இருந்தாலும் திறமையாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கன். பலமில்லாத அணி என எங்களை நினைக்காதீர்கள் என கிரிக்கெட் உலகிற்கு சத்தமாக சொல்லியுள்ளது ஆப்கன். சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும், பங்களாதேஷையும் வீழ்த்தியது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த அணி, தென்னாப்பிரிக்காவை வியாழக்கிழமை காலை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என பொருத்திருந்து பார்ப்போம். AP/PTI

(6 / 7)

இந்தப் போட்டியில் பல ஆச்சரியங்களை அள்ளிக் கொடுத்த அணி ஆப்கன். அதிகம் பலமில்லாத அணியாக இருந்தாலும் திறமையாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கன். பலமில்லாத அணி என எங்களை நினைக்காதீர்கள் என கிரிக்கெட் உலகிற்கு சத்தமாக சொல்லியுள்ளது ஆப்கன். சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும், பங்களாதேஷையும் வீழ்த்தியது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த அணி, தென்னாப்பிரிக்காவை வியாழக்கிழமை காலை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என பொருத்திருந்து பார்ப்போம். AP/PTI(AP)

கலவையான திறமையையே வெளிப்படுத்தி வந்த வங்கதேச அணி, பெரிய நம்பிக்கையை இந்தத் தொடரில் கொடுக்கவில்லை. இருப்பினும், லீக்கில் எப்படியோ தகுதி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு வந்தது. வங்கதேசம் ஜெயித்து ஆஸி., அரையிறுதிக்கு தகுதி பெறும் என எதிர்பார்த்த நிலையில், முக்கியமான ஆட்டத்தில் ஆப்கனிடம் தோற்றது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் சிறப்பாக தயாராக வேண்டும் என்ற பாடத்துடன் விடைபெற்றது வங்கேதசம். (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)

(7 / 7)

கலவையான திறமையையே வெளிப்படுத்தி வந்த வங்கதேச அணி, பெரிய நம்பிக்கையை இந்தத் தொடரில் கொடுக்கவில்லை. இருப்பினும், லீக்கில் எப்படியோ தகுதி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு வந்தது. வங்கதேசம் ஜெயித்து ஆஸி., அரையிறுதிக்கு தகுதி பெறும் என எதிர்பார்த்த நிலையில், முக்கியமான ஆட்டத்தில் ஆப்கனிடம் தோற்றது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் சிறப்பாக தயாராக வேண்டும் என்ற பாடத்துடன் விடைபெற்றது வங்கேதசம். (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)(AFP)

மற்ற கேலரிக்கள்