Sun transit 2024: அள்ளிக்கொடுக்க வருகிறார் சூரியன்..! வருமானத்தில் மிதக்க தயாராக இருக்கும் மூன்று ராசிகள்
Sun transit 2024: சூரியனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருகிறது. மிதுன ராசியில் சஞ்சாரித்து வரும் சூரியன் அடுத்த வாரம் கடக ராசியில் மாற இருக்கிறார். இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு நிதி ஆதாயம், வருமானம் பெருகபோகிறது
(1 / 5)
கிரகங்களின் கடவுளான சூரியன் தற்போது மிதுன ராசியில் இருந்து வரும் நிலையில், ஜூலை 16ஆம் தேதி முதல் கடக ராசிக்கு மாறுகிறார். இதன் காரணமாக யோகமும், பலனும் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
(2 / 5)
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவைாக உள்ளன. சில சமயங்களில் கிரகங்களின் சஞ்சாரத்தால் சுப யோகங்கள் உருவாகும். சூரியனும் புதனும் ஒரே ராசியில் இருந்தால் புத்தாதித்ய யோகம் உருவாகும்
(3 / 5)
கன்னி: கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் கன்னி ராசியினருக்கு நன்மைகள் உண்டாகும். கொடுத்த இடத்தில் சிக்கி இருந்த பணம் கைக்கும் திரும்பும், நிதி ஆதாயம் பெருகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறுவீர்கள்
(4 / 5)
விருச்சிகம்: சூரியன் கடகத்தில் சஞ்சரிப்பதால் சிறப்பான விருச்சிக ராசியனர் எதிலும் வெற்றியை அடைவார்கள். உங்களது முதலீடுகள் பெருகி வருமானமாக வந்து சேரும். வேலை இடத்தில் உங்களது மதிப்பு உயரும். இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் செவி வழி வந்து சேரும்
(5 / 5)
கும்பம்: ஜூலை மாதத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் கும்பம் ராசியினர் நன்மை அடைவார்கள். உங்கள் பணி வெகுவாக பாராட்டப்படும். நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்யாமல், நிதானமாகவும், பொறுமையாகவும் செய்யுங்கள். எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு இருக்கும்
மற்ற கேலரிக்கள்