தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sun And Sani: சனியில் ஏறிய சூரியன் - அடுத்த ஒரு மாதத்துக்கு வாயை மூடி இருக்கவேண்டிய ராசிகள்

Sun and Sani: சனியில் ஏறிய சூரியன் - அடுத்த ஒரு மாதத்துக்கு வாயை மூடி இருக்கவேண்டிய ராசிகள்

Jan 27, 2024 06:05 AM IST Marimuthu M
Jan 27, 2024 06:05 AM , IST

  • சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி கும்ப ராசிக்குப் பெயர்கிறார். மேலும் அங்கு சனி ஆட்சி புரிந்துவருகிறார்.

சூரியன் மற்றும் சனியின் இணைவு கும்ப ராசியில் நடக்க இருக்கிறது. இதனால் சில ராசியினர் கெடுபலன்களைச் சந்திக்கவுள்ளனர்.

(1 / 7)

கடகம்: கடக ராசியினருக்கு வரும் மாதம் கொஞ்சம் தேவையில்லாத பதற்றத்தை உண்டு செய்யும். பணிச்சுமை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடவேண்டாம். திட்டமிட்டு செய்தால் அனைத்து இடங்களிலும் அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்கலாம். 

(2 / 7)

சிம்மம்: இந்த ராசியினருக்கு தொழிலில் சுணக்கம் நிகழும். கடன் சொல்லி தான் பலரும் வாங்கிச் செல்வார்கள். கணவன் - மனைவி இடையே நீ பெரிதா, நான் பெரிதா என்ற ஈகோ சண்டைகள் வரலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. 

(3 / 7)

துலாம்: இந்த ராசியினருக்குத் தங்கள் பணிமீது தங்களுக்கே நம்பிக்கை இருக்காது. வாழ்வில் பகட்டு வாழ்க்கை வாழ விருப்பம் வரும். ஆனால், பணியிடத்திலோ அல்லது தொழிலோ வரவேண்டிய பணம் வராது. உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு அதிகம். 

(4 / 7)

விருச்சிகம்: இந்த ராசியினர், தங்களது இல்லற வாழ்க்கையில் ஈகோ பார்க்கக் கூடாது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கணவன் - மனைவி இடையே சண்டை வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் தாங்கள் விட்டுக்கொடுத்துப்போக வேண்டும். இல்லையேல், வாழ்க்கை கேள்விக்குறியாகும். உறவுகளை நம்பாதீர்கள். பணம் அதிகம் செலவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். 

(5 / 7)

கும்பம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியின் சேர்க்கையால் தொழிலில் எக்கச்சக்கப் பிரச்னை வரும். நிதி நிலை மட்டமாக இருக்கும். செலவுகள் எல்லை மீறி போகும். இல்லறத்துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்