Sumit Nagal: 35 வருடங்களுக்கு பிறகு.. ஆஸி., ஓபனில் தரமான வெற்றியை ருசித்த இந்தியர்
- உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் நாகல், தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாடுகிறார்.
- உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் நாகல், தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாடுகிறார்.
(1 / 6)
இந்திய டென்னிஸ் வீரரான சுமித் நாகல், செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 27-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்-ஐ நேர் செட்களில் வீழ்த்தி, முதல்முறையாக இரண்டாவது சுற்றில் நுழைந்தார். (Photo by WILLIAM WEST / AFP)
(AFP)(2 / 6)
26 வயதான நாகல், தகுதிச் சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார், இரண்டு மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த இந்த கடுமையான ஆட்டத்தில் 31-வது நிலை வீரரான பப்லிக்கை 6-4 6-2 7-6 (7-5) என்ற கணக்கில் தோற்கடித்தார். REUTERS/Ciro De Luca
(REUTERS)(3 / 6)
ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றுக்கு நாகல் முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். 2021 இல், அவர் தொடக்கச் சுற்றில் 2-6, 5-7, 3-6 என்ற கணக்கில் லிதுவேனியாவின் ரிக்கார்டஸ் பெரான்கிஸிடம் தோற்றார். (Photo by WILLIAM WEST / AFP)
(AFP)(4 / 6)
உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் நாகல், தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாடுகிறார். REUTERS/Ciro De Luca
(REUTERS)(5 / 6)
2020 யுஎஸ் ஓபனில், நாகல் இரண்டாவது சுற்றில் 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை வீரரும் இறுதிச் சாம்பியனுமான டொமினிக் தீமிடம் தோற்றார். (AP Photo/Asanka Brendon Ratnayake)
(AP)மற்ற கேலரிக்கள்