தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Srh Vs Csk Highlights: சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியை கண்டு களித்த பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம்!

SRH vs CSK Highlights: சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியை கண்டு களித்த பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம்!

Apr 06, 2024 09:47 AM IST Manigandan K T
Apr 06, 2024 09:47 AM , IST

ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டியது. 

(1 / 6)

சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்களும், ரஹானே 35 ரன்களும், ஜடேஜா 31 ரன்களும் எடுத்தனர். 

(2 / 6)

சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா (12 பந்துகளில் 37 ரன்கள்), மார்க்ரம் (36 பந்துகளில் 50 ரன்கள்) கைகொடுத்தனர். டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்தார். 

(3 / 6)

இந்த போட்டியின் மூலம், சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார், ஷேன் வார்னின் சாதனையை சமன் செய்தார். 

(4 / 6)

சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை பல்வேறு அரசியல் மற்றும் திரையுலகினர் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரைப்பட நடிகர்கள்  பிரம்மானந்தம், வெங்கடேஷ் மற்றும் பல  பிரபலங்கள் கண்டுகளித்தனர். 

(5 / 6)

 இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 3-வது இடத்திற்கு  தள்ளப்பட்டு சன்ரைசர்ஸ் அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்