கார்த்திகை மாத சிறப்புகள்! இந்த மாதத்தில் இதை செய்தால் நல்ல செய்தி வருமாம்!
- கார்த்திகை என்றாலே வெளிச்சமான தீபம் தான் நமது நினவுக்கு வரும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்ததாகும். மேலும் இந்த கார்த்திகை மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன.
- கார்த்திகை என்றாலே வெளிச்சமான தீபம் தான் நமது நினவுக்கு வரும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்ததாகும். மேலும் இந்த கார்த்திகை மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன.
(1 / 7)
கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்திற்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்து ஆகிய பூக்கள் கொண்டு பூஜித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதனை மாதம் முழவதும் செய்து வர சிவபெருமான் மனம் குளிர்ந்து நாம் கேட்பதை அருள்வார்.
(2 / 7)
கார்த்திகை மாதத்தில் தான் சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு சஞ்சரிப்பார். இதனால் இந்த மாதம் முழுவயதும் சுப காரியங்கள் செய்ய ஏதுவான நாளாக அமையும். இம்மாதத்தில் அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம். எந்த வித பிரச்சினைகளும் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் சமயத்திலேயே நீராட வேண்டும். இவ்வாறு நீராடுவது உலகின் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடியதற்கு சமம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பல நற்பலன்களை இந்த அதிகாலை நீராடல் தருகிறது.
(4 / 7)
கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை பூக்கள் வைத்து அர்ச்சனை செய்து பூஜித்து வர தேவர்கள் அடையும் சிறப்பு நிலையான மோட்ச நிலை கிடைக்கும் என இந்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. மேலும் விஷ்ணு பகவானுக்கு துளசி இலையை வைத்து பூஜித்து வர ஒவ்வொரு துளசிகளையும் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது. (Pexel)
(5 / 7)
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.
(6 / 7)
கார்த்திகை மாதத்தில் கோவில்களில் தீபம் ஏற்ற வேண்டும் மேலும் வீட்டிலும் இரு வேலைகளிலும் விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய வீட்டில் அனைத்து மங்களங்களும், சுப வாழ்வும் கிடைக்கும் என கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் தினம் தோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவதாசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டும் ஆவது நிச்சயமாக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
(7 / 7)
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியாய் தோன்றி சரவனப் பொய்கையில் முருகன் குழந்தையாய் உதித்த மாதமும் இந்த கார்த்திகை மாதம் தான். எனவே இந்த மாதத்தில் முருகனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கப்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு வீட்டுக்கு சென்று வருவதும் நன்மை பயக்கும்.
மற்ற கேலரிக்கள்