தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Election Results 2024:தருமபுரியில் பாமக - திமுக இடையே கடும் இழுபறி.. விருதுநகரில் வெற்றி யாருக்கு?- முன்னணி நிலவரம் இதோ!

Election Results 2024:தருமபுரியில் பாமக - திமுக இடையே கடும் இழுபறி.. விருதுநகரில் வெற்றி யாருக்கு?- முன்னணி நிலவரம் இதோ!

Jun 04, 2024 03:44 PM IST Karthikeyan S
Jun 04, 2024 03:44 PM , IST

  • Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

(1 / 6)

இந்த நிலையில் கடந்த சில சுற்றுகளாக மாணிக்கம் தாகூருக்கும், விஜய பிரபாகரனுக்கு இடையே சில நூறு வாக்குகளில் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.

(2 / 6)

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தற்போதைய விவரங்களின்படி, மாணிக்கம் தாகூர் 237548 வாக்குகளும், விஜய பிரபாகரன் 231478 வாக்குகளும், ராதிகா சரத்குமார் 99869 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக் 46484   வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட 6070 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

(3 / 6)

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் மணியைவிட  பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில், இடையில் கள நிலவரம் மாறியது.

(4 / 6)

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தற்போதைய விவரங்களின்படி, சௌமியா அன்புமணி 283553 வாக்குகளும், திமுக வேட்பாளர் மணி 273247    வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி, மணியை விட 10306 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

(5 / 6)

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சுமார் 7000 வாக்குகள் முன்னிலை வகித்த நிலையில் தற்போது 563 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார். இதன் மூலம் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்