தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Oviya Birthday Special: ரசிகர்கள் ஆர்மி உருவாக்கிய நடிகை! கள்ளம் கபடமற்ற அழகிய சிரிப்பு, இளகிய மனம் கொண்ட ஓவியா

Oviya Birthday Special: ரசிகர்கள் ஆர்மி உருவாக்கிய நடிகை! கள்ளம் கபடமற்ற அழகிய சிரிப்பு, இளகிய மனம் கொண்ட ஓவியா

Apr 29, 2024 06:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 29, 2024 06:45 AM , IST

  • தமிழ், மலையாளம், கன்னம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்த புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனின் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்தார்

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த இவர் மலையாள சினிமாவில் 15 வயதில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகை புரிந்த நடிகையாக இருந்த ஓவியா விமல் ஜோடியாக களவாணி படத்தில் அறிமுகமானார்

(1 / 8)

தமிழில் மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கலகலப்பு படத்தில் பாடல்களில் கவர்ச்சி தூக்கல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்

(2 / 8)

மலையாளம் தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஓவியா நடித்துள்ளார். இந்தியிலும் ஒரு படத்திலும் நடித்துள்ளார்

(3 / 8)

2017இல் முதல் முதலாக ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக வந்த ஓவியா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 41 நாள்கள் நிகழ்ச்சியில் இருந்த அவர் தானே போட்டியை விட்டு வெளியேறினார்

(4 / 8)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது விளையாட்டையும், இவரது செயல்பாடும் ரசிகர்களை பெரிதும் கவர, ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்கள்

(5 / 8)

ஓவியா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் பூமர் அங்கிள் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருப்பார்

(6 / 8)

ஓவியா சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்

(7 / 8)

ஓவியா சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்

அழகிய சிரிப்பு, கள்ளம் கபடம் இல்லாத வெளிப்படையான பேச்சால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ஓவியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்