’சேகர்பாபுவை பாராட்டி அதிமுக நிர்வாகிகளை விளாசிய ஈபிஎஸ்?’ கூட்டணி குறித்து ஓபன் டாக்! அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’சேகர்பாபுவை பாராட்டி அதிமுக நிர்வாகிகளை விளாசிய ஈபிஎஸ்?’ கூட்டணி குறித்து ஓபன் டாக்! அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

’சேகர்பாபுவை பாராட்டி அதிமுக நிர்வாகிகளை விளாசிய ஈபிஎஸ்?’ கூட்டணி குறித்து ஓபன் டாக்! அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

Published Mar 09, 2025 05:38 PM IST Kathiravan V
Published Mar 09, 2025 05:38 PM IST

  • யாருடன் கூட்டணி கிடையாது என்பது குறித்து பேச வேண்டாம். நம்மிடம் கூட்டணி கேட்டு பலர் கெஞ்சுகிறார்கள். நம்மை யாரும் மிரட்டி கூட்டணிக்கு பணியவைக்க முடியாது. நமக்கு ஒரே எதிரி திமுகதான், திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்கலாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல் அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களை ஈபிஎஸ் விமர்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

(1 / 8)

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காணொளிக் காட்சி மூலம் (Video Conference) மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

(2 / 8)

அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டங்களுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடையே அலோசனை மேற்கொண்டார். கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது இக்கூட்டதில் ஆலோசிக்கப்பட்டது.

(3 / 8)

வடசென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பாலகங்கா மற்றும் வெங்கடேஷ் பாபுவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த ஈபிஎஸ், அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல் பாராட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. “உங்கள் பகுதியில் ஒரு அமைச்சர் இருக்காரு, அவரு என்னென்ன செய்யராருன்னு தெரியும் இல்ல; அடிக்கடி மக்கள் நலத்திட்டங்களை கொடுக்குறார், மக்களை சந்தித்து கூட்டம் போடுகிறார். நிறைய பரிசு பொருட்களை கொடுக்கிறார். அது போல் நீங்கள் ஏன் செய்யவில்லை. போலி வாக்காளர்களை கணக்கெடுத்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஈபிஎஸ் பேசியதாக கூறப்படுகிறது.  

(4 / 8)

கொளத்தூர் தொகுதியை வென்றாலே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டை வென்றதற்கு சமம் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவுக்கு சவால்விடும் வகையில் அதிமுக செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

(5 / 8)

விருதுநகர் மாவட்டம் குறித்த ஆலோசனையின்போது. ஒருங்கிணைந்து செயல்படதாதால்தான் அதிமுகவின் கோட்டையாக இருந்த விருதுநகரில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம். விருதுநகரில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பெயரை குறிப்பிடமால் விமர்சனம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.  

(6 / 8)

கூட்டணி விவகாரம் குறித்து பேசிய ஈபிஎஸ், கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லுங்கள். ஊடங்களிடம் யாருடன் கூட்டணி, யாருடன் கூட்டணி கிடையாது என்பது குறித்து பேச வேண்டாம் என ஈபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

(7 / 8)

நம்மிடம் கூட்டணி கேட்டு பலர் கெஞ்சுகிறார்கள். நம்மை யாரும் மிரட்டி கூட்டணிக்கு பணியவைக்க முடியாது. நமக்கு ஒரே எதிரி திமுகதான், திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்கலாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

(8 / 8)

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.

மற்ற கேலரிக்கள்