Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய இந்த அதிசயங்கள் தெரியுமா?
- திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.
- திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.
(1 / 7)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். முருகன் அவதரித்த நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். அது நிறைவேறியதும் இங்கு தான்.
(2 / 7)
காவல் தெய்வமான வீரபாகுவின் பெயரால் இத்தலம் வீரபாகு பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வீரபாகுவுக்கு பூஜை முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை நடக்கும்.
(3 / 7)
கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இதன் முன்புள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
(4 / 7)
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
(5 / 7)
பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர். மூலவருக்கு பின்புறம் சுரங்க அறையில் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையை பாம்பறை என அழைக்கின்றனர்.
(6 / 7)
பிரணவ மந்திரமான 'ஓம்' எனும் வடிவில் திருச்செந்தூர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ராஜகோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இதன் உயரம் 157 அடி.
மற்ற கேலரிக்கள்