Women Health: ஆண்களை விட பெண்களை மட்டும் குறி வைத்து தாக்கும் நோய் பாதிப்புகள்.. தடுக்கும் வழிமுறைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Women Health: ஆண்களை விட பெண்களை மட்டும் குறி வைத்து தாக்கும் நோய் பாதிப்புகள்.. தடுக்கும் வழிமுறைகள்

Women Health: ஆண்களை விட பெண்களை மட்டும் குறி வைத்து தாக்கும் நோய் பாதிப்புகள்.. தடுக்கும் வழிமுறைகள்

Updated Mar 24, 2025 05:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Mar 24, 2025 05:58 PM IST

  • சில நோய் பாதிப்புகள் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதற்கு பின்னணி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம்

பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். தங்கள் உடல் மற்றும் மனப் பிரச்னைகளை பற்றி வெளிப்படையாக பேசினால் மட்டுமே அதற்கு உரிய தீர்வுகளை பெற முடியும். உடல் ரீதியாக, ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்கள் என்றே கூறப்படுகிறது. இதன் விளைவாக பெண்கள் எளிதாக நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்

(1 / 8)

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. பரபரப்பான வாழ்க்கை, மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் காரணமாக, பெண்கள் சில ஆபத்தான நோய்களில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்

(2 / 8)

பெரும்பாலான பெண்கள் தற்போது பணி செய்து கொண்டே குடும்ப பொறுப்புகளையும் கவனித்து கொள்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்களை கவனித்துக்கொள்வதை தவிர்த்து விடுகிறார்கள். அத்துடன் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.பெண்கள் மீது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான நோய்கள் இருக்கின்றன. இவை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு பெரும் தொந்தரவு அமைகின்றன. பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய் பாதிப்புகள் எவை, அந்த நோய் பாதிப்பை தடுப்பதும், தற்காத்துக்கொள்வதும் எப்படி என்பதை பார்க்கலாம்

(3 / 8)

பெரும்பாலான பெண்கள் தற்போது பணி செய்து கொண்டே குடும்ப பொறுப்புகளையும் கவனித்து கொள்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்களை கவனித்துக்கொள்வதை தவிர்த்து விடுகிறார்கள். அத்துடன் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.

பெண்கள் மீது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான நோய்கள் இருக்கின்றன. இவை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு பெரும் தொந்தரவு அமைகின்றன. பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய் பாதிப்புகள் எவை, அந்த நோய் பாதிப்பை தடுப்பதும், தற்காத்துக்கொள்வதும் எப்படி என்பதை பார்க்கலாம்

மார்பக புற்றுநோய்: மார்பக புற்றுநோய் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவான நோயாக மாறி வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, நம் நாட்டில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மார்பக புற்றுநோயைத் தடுக்க, நீங்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேமோகிராஃபி செய்து கொண்டால், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறியலாம்.

(4 / 8)

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: உலகில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு இரண்டாவது மிகவும் ஆபத்தான நோயாக இந்த கர்ப்பப்பை புற்றுநோயாக அறியப்படுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படுகிறது. அதைத் தடுக்க, நீங்கள் எச்பிவி (HPV) தடுப்பூசியை எடுத்து கொள்ள வேண்டும்

(5 / 8)

பிசிஓடி (PCOD): இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மற்றொரு ஆபத்தான நோயாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் மாதவிடாய் பிரச்னைகளுடன், பல்வேறு விதமான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. PCOD உள்ள பெண்கள் மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் ப்ரஷ் ஆன பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் உணவில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

(6 / 8)

இதய நோய் பாதிப்பு: ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களில் இதய நோய் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்கள் மத்தியில் இதய நோய் அதிகமாக இருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் அதிகமாக இருப்பது எனவும் கூறப்படுகிறது. எனவே, பெண்கள் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன், உடலில் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

(7 / 8)

ஆஸ்டியோபோரோசிஸ்: ஆண்களை விட பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியன் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டாபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 42.5% பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர், அதே நேரத்தில் 24.6% ஆண்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் நிறைந்த பழங்கள், உணவுகள் சாப்பிட வேண்டும். பால் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் வெயிலில் இருக்க முயற்சிக்க வேண்டும்

(8 / 8)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு

மற்ற கேலரிக்கள்