Smriti Mandhana Record: அடுத்தடுத்து இரண்டு சதங்கள்! முதல் இந்தியராக தனித்துவ சாதனை புரிந்த ஸ்மிருத்தி மந்தனா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Smriti Mandhana Record: அடுத்தடுத்து இரண்டு சதங்கள்! முதல் இந்தியராக தனித்துவ சாதனை புரிந்த ஸ்மிருத்தி மந்தனா

Smriti Mandhana Record: அடுத்தடுத்து இரண்டு சதங்கள்! முதல் இந்தியராக தனித்துவ சாதனை புரிந்த ஸ்மிருத்தி மந்தனா

Published Jun 19, 2024 07:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 19, 2024 07:55 PM IST

  • India vs South Africa Women's ODI: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஓபனரான இருந்து வரும் ஸ்மிருத்தி மந்தனா அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்த புதியதொரு சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இந்த சாதனை புரிந்துள்ளார்

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்ஆப்பரிக்கா மகளிர் அணி ஒரு நாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் சதமடித்து சாதித்துள்ளார்

(1 / 7)

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்மிருத்தி மந்தனா 127 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். இந்த இன்னிங்ஸில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்திருக்கும் மந்தனா 120 பந்துகளில் 136 ரன்கள் அடித்து அவுட்டாகியுள்ளார். தனது இன்னிங்ஸில் 18 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார்

(2 / 7)

அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்திருக்கும் மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனை புரிந்துள்ளார். அத்துடன் ஆசிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் மந்தனா

(3 / 7)

மந்தனாவுக்கு முன்னர் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளாக பலர் உள்ளனர். இதில் நியூசிலாந்து பேட்டரான எமி சாட்டர்த்வைட் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜில் கென்னர், கரேன் ரோல்டன், மெக் லானிங், அலிசா ஹீலி, நியூசிலாந்தின் டெபி ஹாக்லி, இங்கிலாந்தின் நாட் சீவர் ப்ரண்ட், லாரா வூல்வர்ட் ஆகியோர் மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதங்களை அடித்த வீராங்கனைகளாக இருக்கிறார்கள்

(4 / 7)

இருதரப்பு நாடுகளுக்கான ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய இந்திய மகளிர் அணி பேட்டராக ஸ்மிருத்தி மந்தனா உள்ளார்

(5 / 7)

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக சதமடித்திருக்கும் மந்தனா, இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார். மிதாலி ராஜ் தனது 211 இன்னிங்ஸில் 7 சதமடித்துள்ளார். தற்போது 84 இன்னிங்ஸ் விளையாடியிருக்கும் மந்தனா 7 சதங்களை அடித்துள்ளார்

(6 / 7)

இந்திய மண்ணில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் பேட்டராக இருந்து வரும் மந்தனா, தற்போது தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 136 ரன்கள் அடித்திருப்பதன் மூலம் அதிக தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்