Smriti Mandhana: சதத்தை தவறவிட்டாலும் ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
Smriti Mandana breaks Harmanpreet Kaur record: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைத்தார்.
(1 / 6)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட்வொய்ட் செய்தது.
(2 / 6)
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 40.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.
(3 / 6)
முதல் இரண்டு போட்டிகளில் சதம் (117, 136) அடித்த ஸ்மிருதி மந்தனா இந்த போட்டியிலும் அபாரமாக ஆடினார். அவர் 83 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து ஹாட்ரிக் சதத்தை தவறவிட்டார்.
(4 / 6)
சதத்தை தவறவிட்டாலும், இந்திய அணிக்காக ஒரு சிறப்பு சாதனையை வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரையும் ஸ்மிருதி மந்தனா முந்தியுள்ளார்.
(5 / 6)
இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார், ஹர்மன்பிரீத்தின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
மற்ற கேலரிக்கள்