தபால் நிலையங்களில் சிறு சேமிப்புத் திட்டங்கள்.. வட்டி விகிதங்கள் எவ்வாறு உள்ளன.. வாருங்கள் பார்ப்போம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தபால் நிலையங்களில் சிறு சேமிப்புத் திட்டங்கள்.. வட்டி விகிதங்கள் எவ்வாறு உள்ளன.. வாருங்கள் பார்ப்போம்!

தபால் நிலையங்களில் சிறு சேமிப்புத் திட்டங்கள்.. வட்டி விகிதங்கள் எவ்வாறு உள்ளன.. வாருங்கள் பார்ப்போம்!

Published Mar 25, 2025 04:57 PM IST Marimuthu M
Published Mar 25, 2025 04:57 PM IST

  • தபால் நிலையங்களில் சிறுசேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் என்னவாக இருக்குமோ என்ற கவலை பலருக்கும் இருக்கும். அது குறித்துப் பார்க்கலாம்.

நமது மத்திய அரசால் நடத்தப்படும் அஞ்சல் நிலையங்களில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பானவை. பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஒரே மாதிரியாக தான் எடுத்துக்கொள்ளப்பட்டது.

(1 / 6)

 இந்த அஞ்சல் நிலையங்களில் 2024-25 நிதியாண்டின் அடிப்படையில் மூன்றாவது காலாண்டில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை இருந்த வட்டி விகிதமே ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை கணக்கிடப்பட்டு வருகிறது.

(2 / 6)

அதன்படி, சுகன்யா சம்ரிதி யோஜனாவின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கிறது. மூன்று வருட டெர்ம் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF)வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும்.

(3 / 6)

தபால் அலுவலக சேமிப்பு வைப்பு திட்டம் 4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. கிசான் விகாஸ் பத்ராவுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம் ஆகும். இது 115 மாதங்களில் முதிர்ச்சி அடையும். தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான(NSC)வட்டி விகிதம் 7.7 சதவீதம் ஆகும்.

(4 / 6)

தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் மாதாந்திர வருமான திட்டத்திற்கு செயல்படுத்தப்படும் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. அதாவது, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாகும்

(5 / 6)

இந்த வகை சிறுசேமிப்புகள் பெரும்பாலும் தபால் அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலக வங்கிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் அதன் வட்டி விகிதத்தை அறிவிக்கிறது. இந்த 2025-26 முதல் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இல்லை.

(6 / 6)

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!

மற்ற கேலரிக்கள்