Sleeping on Floor: தரையில் படுத்து தூங்குவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் ட்ரை பண்ணுங்க
- Sleeping on the Floor: கோடை காலத்தில் உடல் குளிர்ச்சியை பெறவும், வியர்வை, புழுக்கத்தில் இருந்து விடுபடவும் பலர் தரையில் படுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்கின்றனர். தரையில் படுப்பதால் உடல் கொஞ்சம் இறுக்கமாகிறது.
- Sleeping on the Floor: கோடை காலத்தில் உடல் குளிர்ச்சியை பெறவும், வியர்வை, புழுக்கத்தில் இருந்து விடுபடவும் பலர் தரையில் படுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்கின்றனர். தரையில் படுப்பதால் உடல் கொஞ்சம் இறுக்கமாகிறது.
(1 / 6)
பலர் தரையில் அல்லது தரையில் தூங்கும் காலம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் தூங்குவதற்கு படுக்கைகள் மற்றும் மெத்தைகள் என பயன்படுத்துவதுண்டு. ஆனால் வெறும் தரையில் தூங்குவதால் உடலில் பல்வேறு விதமான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
(2 / 6)
முதுகுவலியை குறைக்கிறது: தரையில் உறங்குவதால் முதுகுத்தண்டுவாடம் பகுதி நேராகிறது. முதுகுவலி பிரச்னை உள்ளவர்களுக்கு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும்
(3 / 6)
தூக்கமின்மை பிரச்னையை குறைக்கிறது: கோடை காலத்தில் ஏற்படும் புழுக்கம், வறட்சியான சூழ்நிலை காரணமாக பலருக்கும் நல்ல தூக்கம் கிடைப்பதில்லை. தரையில் உறங்குவதன் மூலம் தூக்கமின்மை பிரச்னையிலிருமந்து விடுபடலாம்
(4 / 6)
கழுத்து வலியை போக்கும்: கழுத்தை நேராக வைத்துக்கொள்ளாமல் தூங்குவதால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படும். குறிப்பாக சாய்ந்தவாறு தூங்கும் போது கழுத்து வலி ஏற்படும். தரையில் தூங்கும்போது கழுத்து நேராக இருக்கும் என்பதால் இந்த வலியை தவிர்க்கலாம். கழுத்து பகுதியும் நேராக இருக்கும்
(5 / 6)
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது: தரையில் தூங்குவதால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல ரத்த ஓட்டம் அவசியமாகிறது. எனவே தரையில் தூங்குவதால் ரத்த ஓட்டம் சீராகி உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கிடைக்கும்
(6 / 6)
தரையில் படுத்து தூங்குவதால் உடலில் சில பிரச்னைகளும் ஏற்படலாம். அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு அவை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தரையில் இருக்கும் தூசிகள் அல்லது பாய் மற்றும் போர்வையில் இருக்கும் அழுக்குகளால் தும்மல், சளி தொல்லை, அரிப்பு, கண்கள் சிவப்பு ஆகுதல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்
மற்ற கேலரிக்கள்