நாடகத்தில் நான் பெண் வேஷம் போட்டிருக்கேன்.. எனக்கு காதல் என்றால் என்னனு தெரியாது.. சிவாஜி கணேசன்
- நாடகத்தில் நான் பெண் வேஷம் போட்டிருக்கேன்.. எனக்கு காதல் என்றால் என்னனு தெரியாது என சிவாஜி கணேசன் சில வருடங்களுக்கு முன் பேட்டியளித்துள்ளார்.
- நாடகத்தில் நான் பெண் வேஷம் போட்டிருக்கேன்.. எனக்கு காதல் என்றால் என்னனு தெரியாது என சிவாஜி கணேசன் சில வருடங்களுக்கு முன் பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
வெகுநாட்களுக்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசனிடம் நடிகை மீனா நேர்காணல் செய்திருந்தார். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு உங்கள் வீட்டில் யாராவது நடிகர்களா இருந்திருக்கிறார்களா?
இல்லை. நான் பாறையில் வந்த செடி.நம்ம வீட்டில் நடிகர்கள் யாருமே கிடையாது. நான் தான் முதல் நடிகர்.
அப்படியென்றால் நடிப்பதில் எப்படி ஆர்வம் வந்தது. நாடகத்தில் எப்படி சேர்ந்தீங்க?
என்னுடைய வரலாற்றை எழுதினால் சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும். நான் நாடகக் கம்பெனியில் இருந்து வந்ததால், என்னப்பா, மீன் மாதிரி வாயைத் திறக்கிறான் என்று சொன்னார்கள். அவங்க ஒருவிதமாக வளர்ந்தவங்க. நான் ஒருவிதமாக வளர்க்கப்பட்டவன். யாராவது ஏதாவது சொன்னால் வெளியில் போய் அழுக ஆரம்பிச்சிடுவேன்.
(2 / 6)
‘’அப்போது இயக்குநர்களில் கிருஷ்ணன் பஞ்சுவில், கிருஷ்ணன். அவர் என்கிட்ட வந்து சொல்வார், ‘கவலைப்படாதே. இன்னும் நல்லா நடிக்கணும் என்கிற ஆர்வத்தை மனசில் வளர்த்துக்க. நாளைக்கு இந்தப் படம் சக்சஸ் ஆனவுடன் உன்னை யார் யார் வேண்டாம்ன்னு சொன்னாங்களோ, அவங்க எல்லாம் உன் பக்கத்தில் நிற்கப்போறாங்கன்னு சொன்னார்’. அவருடைய வார்த்தை சத்தியமாகப் பலிச்சிடுச்சு. அதனால் தான், கிருஷ்ணன் அண்ணனை எந்தக் கூட்டத்தில் பார்த்தாலும் சாஷ்டங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணுவேன்''.
(3 / 6)
பராசக்தி படத்தில் வசன உச்சரிப்பு பிரமாதமாக இருந்தது, வசனங்கள் பெருமளவில் பேசப்பட்டது அது பற்றி?
‘’அது அற்புதம். சினிமா உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதே பராசக்தி வசனம்; கலைஞரின் நடை தான். நான் சிறுவயதில் கிருஷ்ணன் - பஞ்சுவின் வசனங்களைப் பேசி நடிச்சிட்டு இருப்பேன். அப்போது நல்ல வசனமாக அவங்க கலைஞர்கிட்ட எழுத சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.அந்த மாதிரி இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் உறவு அதிகம். அவருக்கு ஈடாக வந்து இந்தியாவிலேயே, என் உலகிலேயே எழுத்தாளர்கள் இல்லை என்று சொன்னால், எதிரிகள் கூட ஒத்துக்குவாங்க. அப்படி ஒரு மாபெரும் எழுத்தாளன், கலைஞர் கருணாநிதி அவர்கள்''.
(4 / 6)
பராசக்தி நாடகத்திலும் நீங்கள் தான் நடிகராக நடித்தீர்களா?
இல்லை. நான் பார்த்திருக்கிறேன். நடிச்சது இல்லை. சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்த மிஸ்டர் சாமிக்கண்ணு அவர்கள் தான் பராசக்தி நாடகத்தில் ஹீரோவாக நடிச்சவர். முதல் மரியாதை படத்தில் சாமி ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும்னு வசனம்பேசி நடிச்சவர் தான், நாடகத்தில் ஹீரோயின்.
(5 / 6)
அந்தக் காலத்தில் ஆண்கள் தான், பெண் வேஷம் போட்டாங்களா?
கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப்போவ. கே.பி.நாகராஜன், டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், நானு. இவ்வளவு பேரும் ஆல்ரவுண்டர். ஒரு விஷயம், நாடகத்தில் யார் யார் நாடகவேஷம்போட்டோமோ,அவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்து நல்லபடியாக இருக்கோம்.
பராசக்தி படத்தில் உங்கள் ஹீரோயின் யார்?
எனக்கு வேடிக்கையாயிருக்கு. நான் காதல் சீன் பண்ணும்போது எனக்கு கல்யாணமே ஆகல. அதனால் எனக்கு காதல் என்றால் என்னனு தெரியாது. இப்ப மட்டும் என்ன வாழுது, இப்பவும் தெரியாது.
(6 / 6)
முதல் படத்திலேயே உங்களுக்குத் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு கிடைச்சது. அதை நீங்கள் நல்லவிதமாகப் பயன்படுத்திக்கிட்டீங்க?
நான் நல்லா நடிப்பேனா இல்லையா என்பதைத் தெரியுறதுக்கு முன்னாடியே, நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் பாருங்க, என்னுடைய நடமாடும் தெய்வம். நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவர்கள். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றது. நான் இன்னிக்கும் தெய்வமாக வணங்குறது எனது தாயையும், நேஷனல் பிக்ஸர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களையும் தான். நான் மட்டும் அல்ல, எனது குடும்பம், எனது பரம்பரை எல்லாம் தான்பா அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்’’ என்றார், நடிகர் சிவாஜி கணேசன்.
நன்றி: சிவாஜி சேனல் யூட்யூப் சேனல்
மற்ற கேலரிக்கள்