‘பாட்டி கைப்பக்குவத்தில் புளி இல்லாமல் தக்காளி ரசம் செய்வது எப்படி?’ - எளிய குறிப்புகள்!
- பாட்டி ஸ்டைலில் தக்காளி ரசம் செய்வது எப்படி என அறிந்துகொள்ளலாம். அதன் எளிய வழிமுறைகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன.
- பாட்டி ஸ்டைலில் தக்காளி ரசம் செய்வது எப்படி என அறிந்துகொள்ளலாம். அதன் எளிய வழிமுறைகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன.
(1 / 6)
தமிழர் வீடுகளில் ரசம் என்பது சமையலின் கடைசி கட்டம் மட்டும் இல்ல; அது ஒரு அன்பு நிறைந்த பானம். சாப்பாட்டுக்கு சுடுசுடு ரசம் ஊற்றி சாப்பிட்டால்தான், அந்த சாப்பாடு முழுமை அடையும். பழுத்த தக்காளியின் புளிப்பு, மிளகுவின் காரம், பூண்டின் நாவுக்கினிய வாசனை, இவையெல்லாம் சேரும் போது ஒரு அருமையான சுகமான ரசம் உருவாகும். சாப்பாட்டுக்கு மட்டுமல்ல; நோயாளிகளுக்கும் சோர்வு நீக்கும் உணவு, ரசம். அப்படி ரசத்தை வீட்டில் பாட்டி கைப்பக்குவத்தில் புளி இல்லாமல் தக்காளி ரசமாக செய்வது எப்படி என பார்க்கலாம்.
(2 / 6)
தக்காளி ரசம் செய்யத்தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி – 2,
மிளகு – 1 மேசைக்கரண்டி,
சீரகம் – 1 மேசைக்கரண்டி,
பூண்டு – 4 பல் (சிறியதாக நசுக்கிக்கொள்ளவும்),
மஞ்சள்தூள் – அரை மேசைக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப
(3 / 6)
தக்காளி ரசம் செய்யத்தேவையான பொருட்கள்:
கடுகு – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு (சூடோடு சேர்க்க)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
துவரம்பருப்பு தண்ணீர் (சுண்டி எடுத்ததும் சிறிது சேர்க்கலாம்)
(4 / 6)
தக்காளி ரசம் செய்வது எப்படி?:
தக்காளியை முதலில் நசுக்கிக்கொள்ளவும். அதன்பின், அதனுடைய சாறு எடுத்துக்கொள்ளவும். சிலர் புளி சேர்க்கிறார்கள். ஆனால், தக்காளி ரசம் செய்ய நல்ல பஞ்சு தக்காளி இருந்தாலே போதுமானது. கல் உப்புடன் மிளகு, சீரகம் சேர்த்து கையில் நன்கு பொடிக்க வேண்டும். அப்போது தான், நன்கு வாசனை வரும்.
(5 / 6)
பின்னர், ஒரு பாத்திரத்தில் நசுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, மிளகு- சீரகப்பொடி, கொஞ்சம் துவரம்பருப்பு தண்ணீர், சேர்த்து மிதமான தீயில் அதனை கொதிக்க விடவேண்டும். பின்னர், கொதியை ருசி பார்த்து உப்பு சேத்துக்கொள்ளலாம்.
(6 / 6)
பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலையும் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்ற வேண்டும். வாசனை அப்படியே பரவும். பின், நன்கு ரசம் நுரைகட்டி வரும்போது கொத்தமல்லி இலை தூவி, அடுப்பில் இருந்து இறக்குவது நல்லது. சூப்பாக குடிக்க தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது சுவையான தக்காளி ரசம் ரெடி!
மற்ற கேலரிக்கள்